தேவேந்திரகுல வேளாளர்களை பொது பிரிவில் சேர்க்க வேண்டும் என மள்ளர் சேனை நிறுவனர் வழக்கறிஞர் சோலை. பழனிவேல்ராசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள தனியார் அரங்கத்தில் மள்ளர் சேனை கட்சி சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் வேதா, பாஜக விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் இரத்தினசாமி ஆகியோர் செய்திருந்தனர்.
இச்சந்திப்பின்போது
மள்ளர் சேனை நிறுவனரும், வழக்கறிஞருமான சோலை பழனிவேல் ராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் :-
நாங்கள் ஆதிதிராவிடர்களும் இல்லை. பழங்குடியினர்களும் இல்லை. நாங்கள் தேவேந்திரகுல வேளாளர்கள். எனவே எங்களை பொது பிரிவில் சேர்க்க வேண்டும். ஏன் என்றால்
1931 மக்கள் தொகை
கணக்கின்படி வெளி ஜாதிகள் 490 முதல் 493 பக்கம் வரிசையில் ஆதிதிராவிடர்கள் 26,20,571 பேர் இருந்தார்கள். பள்ளர்கள் 8,35,104 பேர்களும் தேவேந்திரகுல வேளாளர்கள் 4,019 பேர்களும் இருந்தார்கள். இந்த மக்கள் தொகை கணக்கின்படி ஆதி திராவிடர்கள் இருக்கும் பட்டியலில் தேவேந்திரகுல மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் தேவேந்திர குல வேளாளர்கள் என்று இருக்கிறது. இந்த பட்டியல் வெளியேற்றம் சம்பந்த மாக மள்ளர் சேனை துணையுடன் டெல்லியை சேர்ந்த ஜுடிஷியல் ஜனர் லிஸ்ட் டாக்டர் வேதா மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளார்.
தேவேந்திரகுல வேளா ளர்கள் மக்களுக்காக மத்திய அரசு அனுப்பிய பட்டியல் மாற்றக் கோப்பு கடந்த இரண்டு வருடமாக தமிழ்நாடு முதல்வர் மேஜையில் உறங்கிக் கொண்டு இருக்கிறது.
பட்டியல் வெளியேற்றம் 2023 டிசம்பர் மாதம் 25 ஆம் தேதிக்குள் நடைபெறவில்லை என்றால் தேவேந்திரகுல வேளாளர் இனத்துக்காக முக்குலத்தோர் தேவர் சமுதாய நிர்வாகிகளின் ஆதரவுடன் வருகிற பாராளுமன்ற தேர்தலின் போது புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின் போது மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா தேவேந்திரன் உள்பட பலர் இருந்தனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்