Tuesday , July 1 2025
Breaking News
Home / செய்திகள் (page 14)

செய்திகள்

All News

அதிர்ச்சி… கேரளாவில் மேலும் 4 பேருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் உறுதி!

அதிர்ச்சி... கேரளாவில் மேலும் 4 பேருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் உறுதி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அதே குளத்தில் குளித்த மேலும் 4 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களில் ஒருவருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறையினர் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பிளவரதலா பகுதியைச் சேர்ந்த அனீஷ் (26), பூதம்கோட்டைச் சேர்ந்த அச்சு (25), பூதம்கோட்டை அடுத்துள்ள ஹரிஷ் (27), போதி நகரைச் சேர்ந்த தனுஷ் (26) ஆகியோர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதில், அனீஷுக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இதே போன்ற அறிகுறிகள் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கன்னரவில பூதம்கோடு அனுலால் பவனைச் சேர்ந்த அகில் என்கிற அப்பு (27) கடந்த ஜூலை 23ம் தேதி மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாஅர். அவர் உயிரிழப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் இருந்தது. முதலில் தனது வீட்டின் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றார். அவருக்கு கடுமையான தலைவலி இருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மரத்தில் இருந்து தவறி விழுந்ததில் அகில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அப்போது அவருக்கு கோலஞ்சேரி மலங்கரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கும் தலைவலிக்கும் தொடர்பிருக்கிறதா என பரிசோதிக்க, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தது

வயநாட்டில் 8-வது நாளாக மீட்புப்பணி: பலி எண்ணிக்கை 406 ஆக உயர்வு!

வயநாட்டில் 8-வது நாளாக மீட்புப்பணி: பலி எண்ணிக்கை 406 ஆக உயர்வு!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 406 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொடர்ந்து 8வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன. 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர்.சுமார் 1000த்திற்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் தொடர்ந்து 8வது நாளாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மண்ணில் புதையுண்டவா்களின் உடல்களை மோப்ப நாய்கள், மனிதர்களை மீட்கும் ரேடார், ஜிபிஎஸ் தொழில்நுட்பம், ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 406 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 187 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் மட்டுமின்றி ஆறுகளிலும் சடலங்களை தேடி வருகின்றனர். நிலச்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள புதுமலையில் அடையாளம் தெரியாத 29 உடல்கள், 184 உடல்பாகங்கள் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. சூச்சிப்பாறை பள்ளத்தாக்கு பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி துவங்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் ஆயுள் காப்பீடு சேவைகளுக்கான ஜிஎஸ்டி-யை தனது ‘மீட்பு பட்ஜெட்டில்’ உயர்த்தியுள்ளது மோடி அரசு. இந்த வசதிகளுக்கு இது பொது மக்களுக்கு அதிக செலவாகும்.

புது டெல்லி: மோடி அரசின் இந்த மீட்பை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்.

வங்கதேச விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தில் ராகுல் பங்கேற்பு!

வங்கதேச விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தில் ராகுல் பங்கேற்பு!

வங்கதேசத்தில் நிலவும் வன்முறை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்து வருகிறார்.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்துவிட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்தார்.

அவரை நேரில் சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வங்கதேச நிலவரம் குறித்து ஹசீனாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.வங்கி மோசடி: இறந்ததாக அறிவிக்கப்பட்டவர் 20 ஆண்டுகளுக்குப் பின் கைது!

இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து அமைச்சர்கள் நேற்றிரவு ஆலோசனை செய்தனர்.

இந்த நிலையில், தில்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் வங்கதேச நிலவரம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்திய – வங்கதேச எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வங்கதேச அரசியல் சூழல், ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வந்தது உள்ளிட்டவை குறித்து விரிவான விளக்கத்தை ஜெய்சங்கர் அளித்து வருகிறார்.

இந்தக் கூட்டத்தில் திமுகவின் டி.ஆர். பாலு, காங்கிரஸின் கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) சுப்ரியா சுலே உள்ளிட்ட பிற கட்சிகளின் எம்பிக்களும் பங்கேற்றுள்ளனர்.

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கே.ராணி அவர்கள் இன்று (05.08.2024) சென்னை, சத்தியமூர்த்தி பவனில் ஒரு லட்சம் ரூபாய் நிதியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்களிடம் வழங்கினார்கள்.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெ.எம்.எச் அசன் மௌலானா அவர்களின் ஏற்பாட்டில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் அடங்கிய வாகனத்தை இன்று (05.08.2024) சென்னை, சத்தியமூர்த்தி பவனில் கொடி அசைத்து அனுப்பி வைத்தனர்.

அமைதிப் பேரணியில் அணி திரள்வோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

அமைதிப் பேரணியில் அணி திரள்வோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம் என்று திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக கட்சித் தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், கருணாநிதி ஆட்சிக் காலத்தில் செய்த எண்ணற்ற சாதனைகளை பட்டியலிட்டுள்ளார். கருணாநிதியின் நினைவினைப் போற்றும் வகையில், ஆகஸ்ட் 7 அன்று சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலை அருகிலிருந்து, அவர் நிரந்தர ஓய்வெடுக்கும் கடற்கரை நினைவிடம் வரை தனது தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதி நினைவிடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகு நடைபெறுகிற முதல் அமைதிப் பேரணி இது என்றும் தெரிவித்துள்ளார்.

: திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது – ஈபிஎஸ்

கடல் அலைகளின் தாலாட்டில் நம் நினைவலைகளாக நெஞ்சில் நிறைந்துள்ள உயிர்நிகர்த் தலைவரின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள திமுக நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் உள்ள கட்சி அலுவலகங்களில் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு மலர் தூவி நன்றியினைச் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ப்ளீஸ் இதை மட்டும் பண்ணாதீங்க. ஆசிரியர்களுக்கு உதயநிதி அன்பான வேண்டுகோள்.!!!

ப்ளீஸ் இதை மட்டும் பண்ணாதீங்க. ஆசிரியர்களுக்கு உதயநிதி அன்பான வேண்டுகோள்.!!!

விளையாட்டு வகுப்பை கடன் வாங்கி வேறு வகுப்புகளை நடத்த வேண்டாம் என்று அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும்.

கல்வி எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு முக்கியம். எனவே கணக்கு மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் விளையாட்டு வகுப்பை கடன் வாங்கி வகுப்பு நடத்த வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரவை ரோட்டரி உறுப்பினர்கள் நிவாரண பொருட்களை வயநாடு கொண்டு சேர்த்த பொழுது…

பண உதவி மற்றும் களப்பணியில் இருந்தவர்கள்: செந்தில், ரவீந்திரன், சதீஷ், ஆனந்த், பாலமுருகன், ஜெயக்குமார், விஜயன், பாரி, பாலகுமார், மணிகண்டன், பிச்சைமுத்து, அருண்…

YouTube player

#aravakurichirotary #senthil #ravindran #sathish # anand #balamurugan #jeyakumar #vijayan #paari #balakumar #manikandan #pichaimuthu #arun #balamurugankandasamy #ilangyarkural

தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு!

அரசு பள்ளிகளில் 6-12ம் வகுப்பு வரை படித்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக அரசின் 5 மாத செலவினத்துக்கு ரூ.4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரியில் 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் இன்று (ஆகஸ்ட் 2ம் தேதி) தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் ரூ. 12,700 கோடிக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன. அதன்படி பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் உரையில் தெரிவித்ததாவது:

  • பள்ளி மாணவர்களுக்குக் காலணி மற்றும் புத்தகப்பை வழங்கப்படும்.
  • மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.6,500லிருந்து 8,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
  • மழைக்கால நிவாரணத் தொகை ரூ.3,000லிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
  • இந்த ஆண்டு முதல் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு விலையில்லா அரிசி, மானிய விலையில் பருப்பு வகைகள், சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவை மீண்டும் வழங்கப்படும்.
  • ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய அட்டைக்கு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்படும்.
  • 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்குத் தயாராக உதவுவதற்குப் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
  • பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • அதேபோல பாடங்கள் வாரியாக நூற்றுக்கு நூறு என முழு மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

: மேலவளவு கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட குற்றவாளி – உத்தரவை திரும்ப பெற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

  • அரசுப் பள்ளியில் 6 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவ, மாணவியர் கல்லூரி படிப்பைத் தொடர மாதந்தோறும் ரூ.1,000 ரூபாய் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியர் மற்றும் பணிபுரியும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க 500 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும்.
  • காரைக்காலில் உள்ள தலைமை பொது மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டப்படும்.
  • காரைக்காலில் பழமையான அருங்காட்சியகம் அமைக்கப்படும்’

இவ்வாறு பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் ரெங்கசாமி வெளியிட்டார்.பள்ளி மாணவர்களுக்குக் காலணி மற்றும் புத்தகப்பை வழங்கப்படும்.மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.6,500லிருந்து 8,000 ரூபாயாக உயர்த்தப்படும்.மழைக்கால நிவாரணத் தொகை ரூ.3,000லிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தப்படும்.காரைக்காலில் உள்ள தலைமை பொது மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டப்படும்.காரைக்காலில் பழமையான அருங்காட்சியகம் அமைக்கப்படும்’

குடியரசுத் தலைவர் தலைமையில் இன்று தொடங்குகிறது 2 நாள் ஆளுநர்கள் மாநாடு

குடியரசுத் தலைவர் தலைமையில் இன்று தொடங்குகிறது 2 நாள் ஆளுநர்கள் மாநாடு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் 2 நாள் ஆளுநர்கள் மாநாடு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று தொடங்குகிறது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் இரண்டு நாள் ஆளுநர்கள் மாநாடு இன்று முதல் ராஷ்டிரபதி பவனில் தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெறும் முதல் ஆளுநர்கள் மாநாடு இதுவாகும்.

இந்த மாநாட்டில் அனைத்து மாநில ஆளுநர்களும் கலந்து கொள்கிறார்கள். குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, தர்மேந்திர பிரதான், சிவராஜ் சிங் சவுகான், அஷ்வினி வைஷ்ணவ், டாக்டர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, பிரதமர் அலுவலகம், அமைச்சரவை செயலகம், உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.

இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் தொடர்பாக குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டள்ள அறிவிப்பில், “மூன்று குற்றவியல் சட்டங்களை செயல்படுத்துவது, உயர் கல்வியில் சீர்திருத்தங்கள், பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம், பழங்குடியினர் பகுதிகள், ஆர்வமுள்ள மாவட்டங்கள் மற்றும் தொகுதிகள் மற்றும் எல்லைப் பகுதிகள் போன்ற கவனம் செலுத்தும் பகுதிகளின் வளர்ச்சி ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

மேலும், ‘எனது இந்தியா’, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ மற்றும் ‘அம்மாவுடன் ஒரு மரக்கன்று’ போன்ற பிரச்சாரங்களிலும், இயற்கை விவசாயத்திலும் ஆளுநர்களின் பங்கு; பொது இணைப்பை மேம்படுத்துதல்; மற்றும் மாநிலங்கள் மற்றும் பல்வேறு மத்திய நிறுவனங்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பில் ஆளுநர்களின் பங்கு ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

பல்வேறு குழுக்களாகப் பிரிந்து ஆளுநர்கள் இது குறித்து விவாதிப்பார்கள். இறுதி அமர்வில், இந்தக் குழுக்கள் தங்களது யோசனைகள் குறித்து குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பிற பங்கேற்பாளர்கள் முன் விளக்கமளிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்றே தலைநகருக்கு வருகை தந்த ஆளுநர்கள், தங்கள் இணையுடன் குடியரசுத் தலைவரை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES