தேவேந்திரகுல வேளாளர்களை பொது பிரிவில் சேர்க்க வேண்டும் என மள்ளர் சேனை நிறுவனர் வழக்கறிஞர் சோலை. பழனிவேல்ராசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள தனியார் அரங்கத்தில் மள்ளர் சேனை கட்சி சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் வேதா, பாஜக விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் இரத்தினசாமி ஆகியோர் செய்திருந்தனர்.
இச்சந்திப்பின்போது மள்ளர் சேனை நிறுவனரும், வழக்கறிஞருமான சோலை பழனிவேல் ராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் :-
நாங்கள் ஆதிதிராவிடர்களும் இல்லை. பழங்குடியினர்களும் இல்லை. நாங்கள் தேவேந்திரகுல வேளாளர்கள். எனவே எங்களை பொது பிரிவில் சேர்க்க வேண்டும். ஏன் என்றால் 1931 மக்கள் தொகை கணக்கின்படி வெளி ஜாதிகள் 490 முதல் 493 பக்கம் வரிசையில் ஆதிதிராவிடர்கள் 26,20,571 பேர் இருந்தார்கள். பள்ளர்கள் 8,35,104 பேர்களும் தேவேந்திரகுல வேளாளர்கள் 4,019 பேர்களும் இருந்தார்கள். இந்த மக்கள் தொகை கணக்கின்படி ஆதி திராவிடர்கள் இருக்கும் பட்டியலில் தேவேந்திரகுல மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் தேவேந்திர குல வேளாளர்கள் என்று இருக்கிறது. இந்த பட்டியல் வெளியேற்றம் சம்பந்த மாக மள்ளர் சேனை துணையுடன் டெல்லியை சேர்ந்த ஜுடிஷியல் ஜனர் லிஸ்ட் டாக்டர் வேதா மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளார்.
தேவேந்திரகுல வேளா ளர்கள் மக்களுக்காக மத்திய அரசு அனுப்பிய பட்டியல் மாற்றக் கோப்பு கடந்த இரண்டு வருடமாக தமிழ்நாடு முதல்வர் மேஜையில் உறங்கிக் கொண்டு இருக்கிறது.
பட்டியல் வெளியேற்றம் 2023 டிசம்பர் மாதம் 25 ஆம் தேதிக்குள் நடைபெறவில்லை என்றால் தேவேந்திரகுல வேளாளர் இனத்துக்காக முக்குலத்தோர் தேவர் சமுதாய நிர்வாகிகளின் ஆதரவுடன் வருகிற பாராளுமன்ற தேர்தலின் போது புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின் போது மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா தேவேந்திரன் உள்பட பலர் இருந்தனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
தஞ்சை, பாபநாசம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு சார்ஜ் போட்டுக்கொண்டே போனில் பேசியதால் விபரீதம் பலத்த தீக்காயங்களுடன் கோகிலா(33) என்பவர் உயிரிழப்பு.
மதுரையில் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பு எதுவும் இல்லாமல் நடைபெற்றதாகவும், இதனால் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை முற்றிலும் தடை செய்ய கோரியும், பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்யாத நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் அவர்களின் ஆணைக்கிணங்க காவல் ஆணையாளர் மாநில செயலாளர் சுமன் தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. ,
இதில் மாவட்ட இளைஞரணி நிர்மல்குமார் மற்றும் முக்குலத்தோர் எழுச்சி கழக மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
மதுரை பழங்காநத்தத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பாக நாளை திங்கட்கிழமை மாபெரும் பெருந்திரள் முறையீடு கோரிக்கை போராட்டம். ஆ.ம.ஆசிரியதேவன் அறிவிப்பு
மதுரை,செப்.24-
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நாளை திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள மாநிலம் தழுவிய மாபெரும் பெருந்திரள் முறையீடு கோரிக்கை போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து டாக்பியா மதுரை மாவட்ட கௌரவ செயலாளர் ஆ.ம.ஆசிரியதேவன் கூறுகையில் :-
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் மதுரை மாவட்டம் சார்பாக மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே உள்ள மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நாளை 25.09.2023, திங்கள்கிழமை, காலை 11.00 மணியளவில் மாபெரும் பெருந்திரள் முறையீடு கோரிக்கை போராட்டம் நடைபெற உள்ளது.
எதற்காக இந்த போராட்டம் என்றால்,தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில், சங்கங்கள் அனைத்தையும் பெரும் நட்டத்திற்கு எடுத்துச் செல்லும் MSC/AIF திட்டத்தின்கீழ் அங்கத்தினர்களுக்கு பயணளிக்காத இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் வாங்கிட வேண்டும் என கட்டாய நெருக்கடி தரும் அரசு மற்றும் கூட்டுறவு துறை நடவடிக்கையை கண்டித்தும், கூட்டுறவு சங்கங்களின் இந்த அசாதாரண சூழ்நிலையை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறியும் வண்ணம் அவர்களது கவனத்தை ஈர்ப்பதற்காக பழங்காநத்தம் மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நாளை 25.09.2023 அன்று நடைபெறும் மாபெரும் பெருந்திரள் முறையீடு கோரிக்கை போராட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்.என தெரிவித்தார்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்