Friday , November 22 2024
Breaking News
Home / செய்திகள் (page 71)

செய்திகள்

All News

மதுரையில் நவம்பர் 24,25,26 தேதிகளில் சித்தர்கள் மகாசபை நடத்தும் மாபெரும் உலக சித்தர்கள் மற்றும் தமிழர்கள் நல்லிணக்க மாநாடு.!

சித்தர்கள் மகாசபை (மதுரை) நடத்தும் மாபெரும் உலக சித்தர்கள் மற்றும் தமிழர்கள் நல்லிணக்க மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நவம்பர் 24,25,26 ஆகிய மூன்று தேதிகளில் நடக்க இருக்கின்றது.

மாநாட்டுக்காக இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து சித்தர்கள், சங்கராச்சாரிகள், ஆதீனங்கள், சிவனடியார்கள், கவர்னர்கள்,மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள், கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இந்த மாநாட்டில் பாரம்பரிய தமிழ் கலாச்சாரம், மருத்துவம் மற்றும் உணவு வகையில் பற்றிய கருத்தரங்கள்,150 மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளது.


மேலும் உலக சித்தர்கள் கூட்டமைப்பின் தலைவராக-சிவயோகி அனுகூலநாதர் ராஜசேகர சுவாமிகள், துணைத் தலைவராக திருமுருகன்,செயலாளராக-
க.செல்வவேல்பாண்டி, துணைச் செயலாளராக டாக்டர் கஜேந்திரன், இணைச் செயலாளராக-
செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளராக ரமணன்,இணைப் பொருளாளராக-
ஹரிஹரன், செயற்குழு உறுப்பினர்கள்
சிமியோன்,மணிகண்டன், ஆறுமுகம், கோவிந்தராஜு, மாரிமுத்து, முருகேசன் அலாவுதீன் ஆகியோர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் எம்.எஸ்.எம்.இ மாநாட்டை அகில இந்திய சேர்மன் டாக்டர் முத்துராமன் தொடங்கி வைத்தார்.

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் ஹோட்டலில் எம்.எஸ்.எம்.இ 5-வது மாநாடு நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம்.எஸ்.எம்.இ அகில இந்திய சேர்மன் டாக்டர் முத்துராமன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்விற்கு தமிழ்நாடு சேர்மன் சௌத்ரி தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு பி.ஆர்.ஓ மாறன் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தேவேந்திரகுல வேளாளர்களை பொது பிரிவில் சேர்க்க வேண்டும் என மள்ளர் சேனை நிறுவனர் வழக்கறிஞர் சோலை. பழனிவேல்ராஜன் கோரிக்கை

தேவேந்திரகுல வேளாளர்களை பொது பிரிவில் சேர்க்க வேண்டும் என மள்ளர் சேனை நிறுவனர் வழக்கறிஞர் சோலை. பழனிவேல்ராசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள தனியார் அரங்கத்தில் மள்ளர் சேனை கட்சி சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் வேதா, பாஜக விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் இரத்தினசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

இச்சந்திப்பின்போது
மள்ளர் சேனை நிறுவனரும், வழக்கறிஞருமான சோலை பழனிவேல் ராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் :-

நாங்கள் ஆதிதிராவிடர்களும் இல்லை. பழங்குடியினர்களும் இல்லை. நாங்கள் தேவேந்திரகுல வேளாளர்கள். எனவே எங்களை பொது பிரிவில் சேர்க்க வேண்டும். ஏன் என்றால்
1931 மக்கள் தொகை
கணக்கின்படி வெளி ஜாதிகள் 490 முதல் 493 பக்கம் வரிசையில் ஆதிதிராவிடர்கள் 26,20,571 பேர் இருந்தார்கள். பள்ளர்கள் 8,35,104 பேர்களும் தேவேந்திரகுல வேளாளர்கள் 4,019 பேர்களும் இருந்தார்கள். இந்த மக்கள் தொகை கணக்கின்படி ஆதி திராவிடர்கள் இருக்கும் பட்டியலில் தேவேந்திரகுல மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் தேவேந்திர குல வேளாளர்கள் என்று இருக்கிறது. இந்த பட்டியல் வெளியேற்றம் சம்பந்த மாக மள்ளர் சேனை துணையுடன் டெல்லியை சேர்ந்த ஜுடிஷியல் ஜனர் லிஸ்ட் டாக்டர் வேதா மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளார்.

தேவேந்திரகுல வேளா ளர்கள் மக்களுக்காக மத்திய அரசு அனுப்பிய பட்டியல் மாற்றக் கோப்பு கடந்த இரண்டு வருடமாக தமிழ்நாடு முதல்வர் மேஜையில் உறங்கிக் கொண்டு இருக்கிறது.

பட்டியல் வெளியேற்றம் 2023 டிசம்பர் மாதம் 25 ஆம் தேதிக்குள் நடைபெறவில்லை என்றால் தேவேந்திரகுல வேளாளர் இனத்துக்காக முக்குலத்தோர் தேவர் சமுதாய நிர்வாகிகளின் ஆதரவுடன் வருகிற பாராளுமன்ற தேர்தலின் போது புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வின் போது மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா தேவேந்திரன் உள்பட பலர் இருந்தனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு

தஞ்சை, பாபநாசம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு சார்ஜ் போட்டுக்கொண்டே போனில் பேசியதால் விபரீதம் பலத்த தீக்காயங்களுடன் கோகிலா(33) என்பவர் உயிரிழப்பு.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES