Saturday , December 20 2025
Breaking News
Home / செய்திகள் (page 91)

செய்திகள்

All News

மதுரை T.அரசபட்டியை சேர்ந்த 3 வயதான குழந்தை திருமருது பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி.!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள T.அரசபட்டியை சேர்ந்த 3 வயதான குழந்தை திருமருது பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள எஸ்.பி திருமால் – பாண்டியம்மாள் ஆகியோரின் மகன் திருமருது (வயது 3) பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை கோ.புதூர் தாமரை தொட்டி அருகே உள்ள பூங்காவில், ஏழை,எளிய மாற்றுத்திறனாளிகள் 15க்கும் மேற்பட்டோருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை “மாற்றம் தேடி” பாலமுருகன் அவர்களின் தலைமையிலும், சமூக ஆர்வலர்கள் அண்ணாநகர் முத்துராமன், பாரதி,அசோக்குமார், மூர்த்தி, பூசாரி மகாலிங்கம், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையிலும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருமால் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரை ஆரப்பாளையத்தில் கவுன்சிலர் ஜெயராம் ஏற்பாட்டில் பகுதி சபைக் கூட்டம்.!

தமிழகத்தில் உள்ளாட்சி தினம் நேற்று (நவம்பர் 01) கடைப்பிடிக்கப்பட்டது. எனவே மாநிலம் முழுவதும் நேற்று கிராம சபை மற்றும் நகர சபை கூட்டங்கள் நடைபெற்றது.

மதுரை ஆரப்பாளையத்தில் 58-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெயராம் ஏற்பாட்டில், பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி பொதுமக்களிடம் இருந்து குறைதீர் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் மாநகராட்சி அதிகாரிகள் கனி, கவிதா மற்றும் திமுக நிர்வாகிகள் எஸ்.எஸ்.மாறன், சீனிரமேஷ், மூவேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

மதுரை மாநகராட்சி 49-வது வார்டு கவுன்சிலர் செய்யது அபுதாகீர் தலைமையில் பகுதி சபை கூட்டம்.!

தமிழகத்தில் உள்ளாட்சி தினம் (நவம்பர் 01) இன்று கடைப்பிடிக்கப்பட்டது. எனவே மாநிலம் முழுவதும் இன்று கிராம சபை மற்றும் நகர சபை கூட்டங்கள் நடைபெற்றது.

மதுரை நெல்பேட்டை உமர்புலவர் பள்ளி திடலில் பகுதி சபை கூட்டம் 49- வது வார்டு மாமன்ற உறுப்பினர் செய்யது அபுதாகீர் தலைமையில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் மாநகராட்சி உதவி பொறியாளர் முருகன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரை மாவட்டம் காதக்கிணறு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்.!!

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம், காதக்கிணறு ஊராட்சியில், உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன


இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆரோக்கிய ஜெயந்தி ஸ்டாலின், வார்டு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன், ஊராட்சி செயலர் செல்லப்பா, வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், கால்நடை மருத்துவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் நியாய விலைக்கடை பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மகா.சுசீந்தரனுக்கு கோல்டு எஸ்.பிச்சை வாழ்த்து.!

பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மகா.சுசீந்தரனுக்கு பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் மதுரை பீ.பீ.குளத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில், மாநகர் மாவட்ட புதிய தலைவர் மகா.சுசீந்திரன் அவர்களுக்கும், வர்த்தக பிரிவின் மாநில செயலாளர் கூடுதல் பொறுப்பாக மாவட்ட பார்வையாளராக பொறுப்பேற்றுக் கொண்ட கார்த்திக் பிரபு அவர்களுக்கும், வர்த்தகப் பிரிவு மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோல்டு எஸ்.பிச்சை சந்தன மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அருப்புக்கோட்டை அருகே கல்லுமடத்தில் தேவர் சிலைக்கு முத்துராமன் ஜி மாலை அணிவித்து மரியாதை.!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அருப்புக்கோட்டை அருகே கல்லுமடத்தில் உள்ள தேவர் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில துணைத்தலைவர் வளசை முத்துராமன் ஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முத்துராமன் ஜி அவர்களுக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

மேலும் 200க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு சேலை வழங்கினார் பின்னர் கொடியேற்றி வைத்து முளைப்பாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

அருப்புக்கோட்டையில் தேவர் சிலைக்கு பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி மாலை அணிவித்து மரியாதை.!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அருப்புக்கோட்டை அருகே கல்லுமடத்தில் உள்ள தேவர் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில துணைத்தலைவர் வளசை முத்துராமன் ஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முத்துராமன் ஜி அவர்களுக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

மேலும் 200க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு சேலை வழங்கினார் பின்னர் கொடியேற்றி வைத்து முளைப்பாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, கமுதி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் தேவர் அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் மரியாதை செலுத்தினார்கள்.

அந்த வகையில் நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக அதன் நிறுவனத் தலைவர் மகாராஜன் தலைமையிலும், மாநில செயலாளர் சுமன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மதுரையில் தேவர் சிலைக்கு மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு,மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில மகளிரணி செயலாளர் சுந்தரச்செல்வி ஒச்சாத்தேவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


இதில் மாநில இளைஞரணி துணைத்தலைவர் U.A.செந்தில்ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மதுரையில் தேவர் சிலைக்கு அகில பாரத இந்து மகா மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி ராஜா மாலை அணிவித்து மரியாதை.!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அகில பாரத இந்து மகா சார்பாக மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் அர்ச்சகர் பேரவை மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகராஜன், ஜெயந்திபுரம் நகர தலைவர் ராஜூ, மற்றும் முத்து, செந்தில், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES