Thursday , November 21 2024
Breaking News
Home / தமிழகம் / இன்று பதிமூன்றாவது முகத்தில் கரியுடன் விவசாயிகள் உண்ணாவிரதம் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி…
MyHoster

இன்று பதிமூன்றாவது முகத்தில் கரியுடன் விவசாயிகள் உண்ணாவிரதம் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி…

இன்று பதிமூன்றாவது முகத்தில் கரியுடன் விவசாயிகள் உண்ணாவிரதம் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், மழையில் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யக் கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க கோரியும் முதலான கோரிக்கைகளுடன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் அய்யாக்கண்ணு அவர்கள் தலைமையில் 46 நாட்கள் உண்ணாவிரதம் கரூர் பைபாஸ், மலர் சாலையில் இன்று 24.10.2021 காலை 10.00 மணிக்கு பதிமூன்றாவது நாளாக லாபகரமான விலை வழங்காமல் சட்டையை பிடிங்கி கொண்டதால் முதல் நாள் சட்டை இல்லாமலும் அரசு வேஷ்டியையும் பிடுங்கி கொண்டதால் இரண்டாவது நாள் விவசாயிகள் கோவணம் கட்டியும் மூன்றாவது நாள் லாபகரமான விலை கொடுக்காமல் விவசாயிகளை அரசு பிச்சை எடுக்க விட்டு விட்டதால் பிச்சை எடுத்தும், நான்காவது நாள் லாபகரமான விலை கொடுக்காமல் விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டியதால் விவசாயிகள் மண்டை ஒட்டுடனும், ஐந்தாவது நாள் விவசாயிகளை மத்திய அரசு லாபகரமான விலை தராமல் ஏமாற்றி விட்டதால் நாமம் போட்டும், ஆறாவது நாள் விவசாயிகள் உணவில்லாமல் வயலில் ஓடும் எலியை பிடித்து தின்றும் உன்ன உணவில்லாமலும் இறந்ததால் இறந்த விவசாயிகளுக்கு பாடை கட்டியும், ஏழாவது நாள் சுதந்திர இந்தியாவில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க விவசாயிகளுக்கு பேச்சுரிமை இல்லாமலும், வெளியே நடமாட உரிமை இல்லாமலும் காவல் துறையினர் வீட்டு காவலில் வைத்துள்ளதால் வாயை கட்டியும், எட்டாவது நாள் லாபகரமான விலை கொடுக்காமல் விவசாயிகளை மோடி அரசு தூக்கில் போட்டு விட்டது என்பதற்காக தூக்கு கயிறை கழுத்தில் மாட்டி கொண்டும், ஒன்பதாவது நாள் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், லாபகரமான விலை வழங்க கோரியும், உத்திர பிரதேசத்தில் விவசாயிகளை காரை ஏற்றி படுகொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்ககோரியும் பிரதமர் மோடி அவர்களின் காலில் விவசாயிகள் விழுந்து காப்பாற்று காப்பாற்று என கெஞ்சியும், பத்தாவது நாள் லாபகரமான விலை தராமல் வேஷ்டி சட்டையை வாங்கி காட்டமுடியாத நிலைக்கு விவசாயிகளை மத்திய அரசு தள்ளிவிட்டதால் இலை தளைகள் கட்டி கொண்டு ஆதிவாசி போன்றும், பதினொன்றாவது நாள் மத்திய அரசு காவல்துறையை கொண்டு விவசாயிகளை சுதந்திரமாக நடமாட விடாமல் வீட்டு காவலில் வைத்துள்ளதால் சங்கிலியால் கால்களை கட்டிக்கொண்டும், இன்று பன்னிரெண்டாவது நாள் விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு லாபம் தராமல் வளமாக வாழ வைப்பேன் பால் பழம் பஞ்சாமிருதம் தருவதாக மோடி கூறிவிட்டு கிலோ ரூபாய் 18-க்கு விற்ற நெல்லை ரூபாய் 54 எடுத்துக்கொள்வேன் என சொல்லிவிட்டு வெறும் இரண்டு ரூபாய் மட்டும் ஏற்றி கிலோவிற்கு ரூபாய் 20 மட்டும் கொடுத்தும், ஒரு டன் ரூபாய் 2700-க்கு விற்ற கரும்பிற்கு ரூபாய் 8100 தருகிறேன் என கூறிவிட்டு வெறும் ரூபாய் 200 மட்டும் ஏற்றி ஒரு டன்னிற்கு 2900 ரூபாய் மட்டும் கொடுத்தும் பாட்டில் நிறைய பாலை ஊற்றி தருகிறேன் என கூறி விவசாயிகள் வாயில் பாலோடு பால் பாட்டிலை எடுத்துக்கொண்டு வெறும் ரப்பரை மட்டும் வைத்து விட்டார் என வாயில் ரப்பாரை வைத்து கொண்டும், இன்று பதிமூன்றாவது நாளாக இரண்டு மடங்கு லாபகாரமான விலை தந்து விவசாயிகள் முகமெல்லாம் செழிப்பாக மாற்றுகிறேன் எனக்கூறிய மோடி அய்யா இரண்டு மடங்கு லாபம் தராமல் ஏமாற்றி விவசாயிகள் முகத்தில் மோடி அய்யா கரியை பூசிவிட்டார் என விவசாயிகள் தங்கள் முகங்களில் கரியுடன் உண்ணாவிரத போராட்டம் காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது.

Bala Trust

About Admin

Check Also

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES