திருப்பதியை போல் மாற்ற ஆசைப்பட்டு தெலுங்கானா முதல்வர் செஞ்ச காரியம்.. அதிர்ச்சியில் பாஜக
ஹைதரபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத் அருகே புகழ் பெற்ற லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலிலை திருப்பதியை போல் மாற்ற வேண்டும் என விரும்பினார் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ். இதற்காக அவர் செய்த செயல்கள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் யாதகிரிகுட்டா என்ற சிறு நகரம் அமைந்துள்ளது. அங்கு ஆயிரம் ஆண்டுகள் பழமையான லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் யாதகிரிகுட்டா லக்ஷ்மி நரசிம்மர் சுவாமி கோவிலை திருப்பதி ஏழுமலையான் கோவில் போல் சர்வதேச அளவில் புகழ் பெற செய்ய வேண்டும் என்று தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் முடிவு செய்தார்.
2020ம் ஆண்டு திறப்பு
இதற்காக ஆயிரத்து 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கோவில் புணர் நிர்மானம் மற்றும் 15 ஏக்கர் பரப்பளவில் தங்கும் அறைகள் கட்டுவது ஆகியவை உள்ளிட்ட அபிவிருத்தி பணிகள் நடந்து வருகிறது.
2020 ஆம் ஆண்டுக்குள் மொத்த பணிகளையும் முடித்து பக்தர்களின் வழிபாட்டிற்கு கோவிலை திறந்து விடவேண்டும் என்ற தெலுங்கானா மாநில அரசு பணிகளை விரைவு படுத்தி வருகிறது. மாநில அரசின் வேகத்திற்கு ஏற்ப அம்மாநில அறநிலைத் துறை அதிகாரிகளும் கோவில் புணர்நிர்மான பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இதனால் அங்கு இரவு பகலாக வேலைகள் நடந்து நடைபெற்று வருகின்றன.
சார்மினார் கட்டிடம்
ஆயிரமாண்டு பழமையான கோவிலை புனர்நிர்மானம் செய்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இணையாக மாற்றி காட்டுகிறோம் என்று களமிறங்கிய தெலுங்கானா அரசு, யாருக்கும் தெரியாமல் கோவிலில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கல் தூண்களில் மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் உருவம், தெலுங்கானா மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கான அடையாளங்கள், ஹைதராபாத் நகரின் அடையாளமாக திகழும் சார்மினார் கட்டிடம் ஆகியவற்றை செதுக்கியது. இது போன்ற அத்துமீறல்களுடன் கூடிய சிற்பங்கள் செதுக்கப்பட்ட கல் தூண்கள் கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பாஜகவிர் போராட்டம்
இதனை அறிந்த பாரதிய ஜனதா கட்சியினர் தெலுங்கானா மாநில அரசை கண்டித்து யாதகிரிகுட்டா லட்சுமி நரசிம்மர் சாமி கோவில் எதிரே தீவிர போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினர் ஒரு கட்டத்தில் கோவில் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
விடாமல் விரட்டிய போலீஸ்
இதனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் விடாமல் விரட்டிச் சென்றபோது போலீசார் ஓட முடியாமல் கீழே விழுந்த போராட்டக்காரர் ஒருவரை பிடித்து கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசார் ஒருவர் அவருடைய கழுத்தை இறுக்கிப் பிடித்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட நபருக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜகவினர் குற்றச்சாட்டு
தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முதல்வர் சந்திரசேகர் ராவ், போலீசார் ஆகியோருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். தெலங்கானா மாநில அரசின் இந்த செயல் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இழிவுபடுத்துவதாக உள்ளது என்றும், பழங்காலத்தில் மன்னர்கள் கோயில் கட்டும்போது தங்களுடைய சிலையை கோவிலில் இரவு வரை ஒரு சில இடங்களில் வழக்கமாக வைத்திருந்தனர். அதுபோன்ற செயலில் சந்திரசேகர ராவ் தற்போது ஈடுபட்டுள்ளார். எனவே அவருடைய செயல் மன்னராட்சி காலத்தில் நினைவுபடுத்துவதாக அமைந்து உள்ளது என்று பாஜகவினர் குற்றம் சாட்டினார்.
news : swami hyderabad