காவல்துறை என்றும் மக்களின் நண்பன் தான் !!
காவல்துறை என்றால் சற்று பொதுமக்களிடையே கார சாரம் இருந்து வருகிறது. இதற்கு காரணம் காவல்துறை பற்றி தவறான புரிதலை கொண்டு உள்ளவர்களால் தான்..அவர்கள் மக்களுக்காக குற்ற செயல் மற்றும் மக்களின் பாதுகாப்புகாக பணியாற்றி வருகின்றனர். உலக முழுவதும் உள்ள நாடுகளில் சிறந்து விளங்கும் ஒரு துறை என்றால் அது காவல்துறை தான்.மக்களுக்காக 24 மணி நேரமும் தன் தவறாத சத்திய கடமையில் பணியாற்றும் ஒரு பொறுப்பு உணர்வு உள்ள துறையும் காவல்துறை தான்.இந்த துறையில் தான் பகல் மற்றும் இரவு நேரங்களில் பணியாற்ற ஆண், பெண் என வேறுபாடுயின்றி இருபாலரும் இயங்குகின்றார்கள்.
சாதி,மாதங்களுக்கு அப்பார் பட்டு மணிதநேயத்துடன் இருப்பதும் இந்த துறை தான்!!
மக்களின் மகத்தான சேவையில் உள்ளவர்களும் இவர்கள் தான்.இந்த துறையில் ஒரு சிலர் செய்யும் தவறினால் ஒட்டு மொத்த துறையையும் குறை சொல்வது இயல்பகாது.பணியாற்றும் அனைவரும் மனிதர்கள் தான் அவர்கள் தவறு செய்யமாட்டர்கள் என்று சொல்ல முடியாது.மனிதர்கள் அனைவரும் தவறு செய்ய கூடியவர்கள் தான்.இந்த துறையில் தான் தவறு செய்யும் யாராக இருந்தாலும் சற்றும் கூட யோசிக்கமால் தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.இவர்களின் மனித நேய பணிகளும் நிறைய மறைக்கப்பட்டு வருகிறது.இவர்கள் தெரிந்து செய்யும் பணியை விட தெரியாமல் செய்யும் மனிதநேயம் நம்மை சில சமயங்களில் கண்கலங்கவும் செய்கிறது.சமீபத்தில் கூட நான் கண்ட ஒரு சிறிய நிகழ்வு ஒரு மனநல பாதித்த பெண் ஒருவர் சாலையில் பிரச்சினை செய்து கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டு இருந்தார் அப்போது வந்த காவலர்களில் ஒருவர் தன் அன்பான பேச்சால் மற்றும் அரவனைப்பாலும் அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.அங்கு எத்தனையோ மனிதர்கள் நின்று வேடிக்கை பார்த்த நிலையில் மனிதர்களுக்கு தோன்றாத செயலை காவலர் தன் பாக்கெட்டில் இருந்து ஆட்டோவிற்கு பணம் எடுத்து கொடுத்தார், அந்த பெண்மணியை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தரர்..இந்த சம்பவம் அங்குள்ளவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது என்னையும் கூட! இப்படி பட்ட செயலையும் காவல்துறை மனிதனநேயத்தையும் சொல்லி தானே ஆக வேண்டும்.
இவ்வாறு பல்வேறு சம்பங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன.இவர்கள் தவறு செய்தால் அதைப்பற்றி பேசி தீர்க்கும் நாம் அவர்கள் செய்யும் நல்லதை பற்றி ஏன் யோசிப்பதில்லை இதில் பலவும் மறைக்கப்பட்டுள்ளன இந்த காவல்துறைக்கு போதுமக்களாகிய நாம் ஆதரவும் அவர்கள் அறிவுறுத்தலின் படி செயல்பட்டால் அவர்களும் நம் நண்பர்கள் தான்..காவல்துறை சார்பாக மக்களின் பயன்பாட்டிற்கு பல செயல்முறைகள் செயல்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.பல செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்த உள்ளார்கள்.குற்ற செயல்களை தடுக்க கேமராக்கள்,வாகன திருட்டை தடுக்க போக்குவரத்து துறை சார்பான நடவடிக்கை பெண்கள் பாதுகாப்புகாக காவலன் அப்ளிகேஷன்.இரவு நேரங்களில் நாம் நிம்மதியாக தூங்க அவர்கள் நமக்காக தெரு தெருவாக இரவு நேர பணியில் ரோந்து காவலர்கள் என பல்வேறு செயல்முறை!!
நம் குடும்பங்களை பாதுகாக்க அவர்கள் குடும்பங்களை பிரிந்து பணியாற்றுவது இவ்வாறு பல தியாகங்களை அவர்கள் செய்கிறார்கள்.இவர்களுக்கு பொதுமக்கள் ஆகிய நாம் எவ்வாறு உதவு வேண்டும் எப்படி ஆதரவு தர வேண்டும் நாமும் ஒத்துழைப்பு தந்தால் தானே நம் நாட்டையும் வீட்டையும் சுத்தமாகவும்,பாதுகாப்பாகவும் வைக்க முடியும்! இவர்களின் மனிதநேயத்தையும்,தியாகத்தையும் நினைத்து,சிந்தித்து நாம் ஆதரவுடன் நடந்தால் “ஆம் காவல்துறை நம் நண்பன்”” தான்
செய்தியாளர் : நா.யாசர் அரபாத்