கரூர் தொழிற்பேட்டை அரசு காலனியில் கரூர் சஷ்டிக் குழுவினரால் புதிதாக கட்டப்பட்டுள்ள கல்யாண சுப்ரமணிய சுவாமி ஆலய கும்பாபிஷேகம் இன்று காலை 10 மணியளவில் நடை பெற்றது
முன்னதாக நேற்று காலை கணபதி ஹோமம் மாலை முதற் கால யாக பூஜை மருந்து சாத்துதல், கலச ஸ்தாபனம் நடைபெற்றது
இன்று காலை இரண்டாம் கால யாக பூஜை நா டி சந்தானம் பூர்ணாகுதி நடைபெற்று கலசங்கள் கணேச சர்மா தலைமையில் செகந்நாத ஓதுவார் திருமுறை இசையுடன் கோயிலை வலமாக வந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நேற்றும் இன்றும் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை ஆவண கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.
கும்பாபிஷேகத்தில் திருப்பணிகமிட்டி தலைவர் மேலை.பழநியப்பன் சஷ்டிக்குழு நிறுவனர் காளிமுத்து ஐயா, வழக்கறிஞர் கார்த்திகேயன் மல்லிகாசுப்பராயன், மாரிமுத்து,ஆனிலை பாலகிருஷ்ணன், மருது ஸ்தபதி நல்லதம்பி, ஓதுவார் கண்ணன் ஏ பிராமசாமி பி.ராமலிங்கம் செட்டியார் தர்மர், கோபால், கார்த்தி கணேசன், வி.பி.எஸ்.பாலசுப்ரமண்யம் பத்திர எழுத்தர் சண்முகம் அர்த்தசாம பூஜை அடியார் திருக்கூட்டம், பரமேஸ்வர சுவாமி, சென்னிமலை சித்தர் உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்றனர்.
Coursty: http://www.dottamil.com/?p=2050