Friday , November 22 2024
Breaking News
Home / குறுகிய செய்திகள் / இன்றைய குறுகிய செய்திகள் – 16/09/2019
MyHoster

இன்றைய குறுகிய செய்திகள் – 16/09/2019

மதுரை : ஜீவா நகர் முதல் தெருவில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை குப்பை தொட்டியில் மீட்பு.

மீட்கப்பட்ட குழந்தை குறித்து காவல்துறையினரிடம் சான்று வாங்கி வந்தால் அனுமதிப்பதாக கூறி அரசு ராஜாஜி மருத்துவமனை அலைக்கழிப்பு

டெல்லி குடியரசு தலைவர் மாளிகை மீது ட்ரோன் பறக்கவிட்ட அமெரிக்காவை சேர்ந்த தந்தை – மகனை பிடித்து போலீசார் விசாரணை.

சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம்

* கோரிக்கைகள் தொடர்பாக சரக்குகளை கையாளும் CFS நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு வராததால் ஸ்டிரைக்

திருச்சி : சுப்பிரமணியபுரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 33 வாக்கி டாக்கிகள் திருட்டு – 2 பேரை கைது செய்து விசாரணை.

டி.என்.பி.எல். போட்டிகளில் ‘மேட்ச் ஃபிக்ஸிங்’ ? – பிசிசிஐ விசாரணை.

இன்று மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்

துணைவேந்தர், பதிவாளர் பதவிகளில், பழங்குடியினர், மகளிருக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது குறித்து கோரிக்கை வைக்கிறார்

டெல்லியில் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உளவுத்துறை உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ.29,008-க்கு விற்பனை

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜர்.

நக்கீரன் கோபால் கைதானபோது சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் வைகோ ஆஜர்

நத்தம் ரோட்டில் சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் டிப்பர்லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பலி

மதுரையை சேர்ந்த உதவி பொறியாளர் ஒடிஷாவில் அடித்துக் கொலை

ஜம்மூ-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்பது பற்றி வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

* ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்த கோரி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார் வைகோ

பேனர் விவகாரம் – சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பிரமாண பத்திரம் தாக்கல்

* இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைக்க வேண்டாம் என கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது- திமுக மனு

அயோத்தி வழக்கின் விசாரணையை நேரலை செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
அமர்வு சம்மதம்

* நேரலை செய்வதற்கான வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளன என அறிக்கை சமர்பிக்க
பதிவாளருக்கு உத்தரவு

டெல்லியில் குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு உடன் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்திப்பு.

ஜம்மூ-காஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்-க்கு அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம்

ஆலந்துறை ஆறு அணைக்கட்டு தூர்வாரும் பணி குறித்த நிலை அறிக்கையை புகைப்படங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும்

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு தொடர்ந்த வழக்கில் நெல்லை ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

திண்டுக்கல் அடுத்துள்ள கோவிலூரில் 100 அடி கிணற்றுக்குள் விழுந்த பெண் தீயணைப்புத் துறையினரால் உயிருடன் மீட்பு. காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி.

கோதாவரியில் படகு கவிழ்ந்த இடத்தை ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்

‘ஓரங்கட்டப்பட்டாரா புகழேந்தி?’

அமமுக வெளியிட்ட செய்திதொடர்பாளர்கள் பட்டியலில் புகழேந்தியின் பெயர் இல்லை

* டிடிவி தினகரனை விமர்சித்து புகழேந்தி பேசியதாக வீடியோ வெளியான நிலையில்
அவரது பெயர் இடம்பெறவில்லை

ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், சிறிய வெற்றி; எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால், அது அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும் அந்த ஆபத்து இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது

– கமல்ஹாசன்

எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால், அது ஜல்லிக்கட்டை விட பன்மடங்கு பெரிதாக இருக்கும்!’

– கமல்ஹாசன்

பள்ளி காலாண்டு விடுமுறை நாட்களில் காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சி நடத்துங்கள்”

செப்.24 முதல் அக்.2 வரை காந்திஜெயந்தி விழாவை கொண்டாட வேண்டும்

பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதை, மாநில திட்ட இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும் -முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு

* தமிழக அரசின் புதிய மின்சார வாகன கொள்கை அறிக்கையை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்

பெப்சி அமைப்பிற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

* பையனூரில் ரூ.5 கோடியில் அம்மா அரங்கம் அமைக்க முதல்கட்டமாக ரூ.1 கோடி வழங்கினார் முதல்வர்

ஆந்திர முன்னாள் சபாநயாகர் கோடல சிவபிரசாத், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை.

சந்திரபாபு நாயுடு ஆட்சிகாலத்தில் சபாநாயகராக பதவி வகித்தவர் சிவபிரசாத்

நேற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்ற விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விசாரணை

* சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து விசாரணை நடத்த ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவு.

சிவகங்கையில் ஜீவசமாதி அடைவதாக கூறிய சாமியார் இருளப்பசாமி அவரது மகன் உட்பட 7 பேரிடம் சிவகங்கை காவல் நிலையத்தில் விசாரணை.

காலாண்டு தேர்வு விடுமுறை ஏற்கனவே அறிவித்தபடி உண்டு – பள்ளிக்கல்வித்துறை

* “காந்தி பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் விருப்பமுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்கலாம், கட்டாயம் கிடையாது”

* பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவிப்பு

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை அரசு வழங்க கோரி வழக்கு

* மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; இரவில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்பு

– வானிலை ஆய்வு மையம்

தெலங்கானா: புனித பிரான்சிஸ் மகளிர் கல்லூரியில் குர்தாவை குட்டையாக அணிய தடைவிதித்ததற்கு எதிர்ப்பு

கல்லூரி நிர்வாகத்தின் ஆடை கட்டுப்பாடுக்கு எதிராக மாணவிகள் பதாகைகளை ஏந்தி போராட்டம்

*முழங்காலை மறைக்கும் வகையில் குர்தா அணிய வேண்டும் என நிர்வாகம் உத்தரவிட்டதற்கு மாணவிகள் எதிர்ப்பு

உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தந்துவிட்டது

* தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு விரைவில் வரும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

ஜீவசமாதி அடைவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதாக சாமியார் இருளப்பனின் மகன் கண்ணாயிரம் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

அமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது; கட்சியே என்னுடையது

– புகழேந்தி

தமிழர்கள் நன்றியற்றவர்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருக்க மாட்டார்

– ரவீந்திரநாத் குமார், எம்.பி.

குடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்க எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும்?

* தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் சேர்வோருக்கு குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை வழங்கக் கோரி மனு

– கட்டாயக் கல்வி உரிமை சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரி பஞ்சாப் அசோசியேஷன் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்னாள் தனிச் செயலர் கே.வி.கே.பெருமாளுக்கு டெல்லியில் உள்ள லோக் நாயக் பவனில் செப்.18 ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 261 புள்ளிகள் சரிந்து 37,123இல் வர்த்தகம் நிறைவு

தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 72 புள்ளிகள் குறைந்து 11,003இல் வணிகம் நிறைவு

ன்னட மொழியும் கன்னட கலாசாரமும் முக்கியம் – கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா

* அனைத்து அலுவல் மொழிகளும் சமம் – கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா

* கன்னடமே எங்களுக்கு பிரதான மொழி – எடியூரப்பா

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 1,609 பேனர்கள் ஒரே நாளில் அகற்றம்

விதிமீறல் பேனர்கள், விளம்பர பதாகைகளை அகற்ற தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது

– கோவை மாநகராட்சி ஆணையர்

தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது

இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,18,018 பேர் மீது வழக்குப்பதிவு

நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற 36,835 பேர் மீது வழக்குப்பதிவு

– டிஜிபி அலுவலகம்

யார் எவ்வளவு முயன்றாலும் என்னையும், முதல்வர் பழனிசாமியையும் பிரிக்க முடியாது

– துணை முதல்வர் ஓபிஎஸ்

மாணவர்களின் கல்வித்திறன் மேம்படும் என்பதால் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டுவரப்படுகிறது

– துணை முதல்வர் ஓபிஎஸ்

சவுதி எண்ணெய் ஆலைகளில் நடத்தப்பட்ட தாக்குதலால் எரிபொருள் விநியோக பாதிப்பு இருக்காது என நம்புகிறோம்

சவுதியில் எண்ணெய் ஆலைகளில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலை அடுத்து நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்

– தர்மேந்திர பிரதான்

ஒரே நாடு, ஒரே ரேஷன் என்பது இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும்

பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்பவே இந்தி திணிப்பு முயற்சி நடைபெறுகிறது

ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவரவர் மொழிதான் சிறப்பு; ஆனால் அதை மறந்து உள்துறை அமைச்சகம் செயல்படுகிறது

– நல்லகண்ணு

பொன்.ராதாகிருஷ்ணன் மொழி மாறிவிட்டார் என நினைக்கிறேன்

எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார்; இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம்

– கமல்ஹாசன்

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங். – தேசியவாத காங். தலா 125 தொகுதிகளில் போட்டி

288 தொகுதிகளில் மீதியுள்ள 38 தொகுதிகள் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்

– சரத்பவார்

* காங். தலைவர் சோனியாவை தேசியவாத காங். தலைவர் சரத்பவார் சந்தித்த நிலையில் தொகுதிப்பங்கீடு இறுதியானது

 

2019 தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி தொடரின் போது பிசிசிஐ நியமித்த ஊழல் கண்காணிப்புக் குழுவினர் தொடரை கண்காணித்தனர்

– சூதாட்டம் என எழுந்த புகாரையடுத்து தமிழ்நாடு பிரீமியர் லீக் நிர்வாக தலைவர் பி.எஸ்.ராமன் அறிக்கை

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை

மார்ச் 27 – மொழிப்பாடம்

மார்ச் 28 – விருப்பப்பாடம்

மார்ச் 31 – ஆங்கிலம்

ஏப்.3 – சமூக அறிவியல்

ஏப். 7 – அறிவியல்

ஏப். 13 – கணிதம்

* மே 4ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்

2020 மார்ச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது; மே 4ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்

– அரசுத்தேர்வுகள் இயக்குநர்

* மொழிப்பாடம், ஆங்கிலப்பாடத்திற்கான இருதாள்கள் ஒரே தாள்களாக மாற்றியதையடுத்து அட்டவணை வெளியீடு

இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து செப்.20ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம்

– மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் முடிவு

 

Bala Trust

About Admin

Check Also

கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் ஈடு இணையற்ற வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் ஈடு இணையற்ற வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் என்று முதல்வர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES