Friday , November 22 2024
Breaking News
Home / இந்தியா / மோடியைக் கண்டு பயப்படும் கட்சியல்ல காங்கிரஸ்! மோடி – ஷா, நாட்டுக்கு என்ன செய்தார்கள் என ராகுல் கேள்வி?
MyHoster

மோடியைக் கண்டு பயப்படும் கட்சியல்ல காங்கிரஸ்! மோடி – ஷா, நாட்டுக்கு என்ன செய்தார்கள் என ராகுல் கேள்வி?

நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பிதமர் நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும், நாட்டில் நல்லிணக்கத்தைப் பேணவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன். அவர்கள் என்ன செய்தாலும் எனது பணியைத் தொடர்ந்து செய்வேன். எங்கள் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் எங்களை அடக்கிவிட முடியும் என்று பாஜக அரசு நினைக்கிறது. ஆனால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் இந்த நாட்டிற்காக என்ன செய்கிறார்கள். ஜனநாயகத்துக்கு எதிராக அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் அதற்கு எதிராக நிற்போம்.” இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவருடைய மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள, ‘யங் இந்தியா’ நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதில் மோசடி நடந்து உள்ளதாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, 2013ல் வழக்கு தொடர்ந்தார்.

இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை கடந்தாண்டு இறுதியில் வழக்குப் பதிவு செய்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் ஆகியோரிடம், ஏற்கனவே விசாரணை நடந்தது. இதைத்தொடர்ந்து  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரிடமும் அமலாக்கத் துறை விசாரித்துள்ளது. இதை எதிர்த்து நாடு முழுதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.

பின்னர் டெல்லி ஐ.டி.ஓ.,வில் அமைந்திருக்கும் நேஷனல் ஹெரால்டு அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய 12 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், இன்று(ஆக.3) நேஷனல் ஹெரால்டு கட்டடத்தில் செயல்படும் யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர். மேலும், தங்களின் அனுமதியின்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது எனவும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை பழிவாங்கும் செயல் என காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

Bala Trust

About Admin

Check Also

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES