உலக அமைதி தினத்தை முன்னிட்டு ஜமால் முகமது கல்லூரி சமூக பணி துறை,அறம் மனநல மருத்துவமனை,மற்றும் கன்மலை அறக்கட்டளை சார்பாக திருச்சி, சிந்தாமணி, பதுவைநகரில் இன்று (21.09.2019) அன்று மாலை 6.00 மணியளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கன்மலை அறக்கட்டளையின் நிறுவனர் J.வில்பர்ட எடிசன் தலைமை தாங்கி சிறப்புரை வழங்கினார். Dr.B.R. அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் பக்கிரிசாமி முன்னிலை வகித்தார். அறம் மன நல மருத்துவமனையின் ஆலோசகர் விஜிபிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அமைதி தினம் மற்றும் போதை பழக்கத்தால் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து நோக்கவுரையாற்றினார்.
ஜான்சிராணி மகளிர் மன்ற செயற்குழு உறுப்பினர்கள் அல்லிராணி, ஜெசிந்தா மோசஸ், மெர்சி, யாமினிபிரியா, பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். முன்னாதாக ஜான்சிராணி மகளிர் மன்ற செயற்குழு உறுப்பினர் அழகு ரோஜா வரவேற்புரை வழங்கினார்.இறுதியாக ஜமால் முகமது கல்லூரி சமூக பணி துறை மாணவர் சிக்கந்தர் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜான்சிராணி மகளிர் மன்றத்திற்க்கு நன்றி.
*என்றும் மக்கள் பணியில்*
கன்மலை அறக்கட்டளை
திருச்சி-
9865182522