தமிழ்நாடு இளைஞர் கட்சி கலந்துகொள்ளும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்.
கரூர்.24.09.19.
தமிழகத்தில் 1170 ஏக்கர் பரப்பளவில் 5 ஆவது மிக பெரிய ஏரி நமது கரூரில் உள்ள பஞ்சப்பட்டி ஏரி ஆகும். காவிரி ஆற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை குழாய் மூலம் பஞ்சப்பட்டி ஏரியில் சென்று சேர்த்தால் 300 க்கும் மேற்பட்ட குக்கிராமங்களின் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு 25 வருவாய் கிராமங்களின் குடிநீர் தேவை தீர்க்கப்பட்டு, விவசாயம் செழிப்படைந்து , விவசாயமக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
இதை தமிழக அரசின் கவனத்திற்க்கு கொண்டு செல்ல கிருஷ்ணராயபுரம், குளித்தலை, மற்றும் கடவூர் தாலுக்காவின் விவசாயிகளுடன் இணைந்து விவசாய மக்களின் வாழ்வுரிமையை காக்க தமிழ்நாடு இளைஞர் கட்சி, கரூர் மாவட்டமும் இம் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்து கொள்கின்றது.
இந்த மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி , கரூர் மாவட்டத்தின் சார்பாக
மத்திய மண்டல தலைவர் . திரு. முகமது அலி. மற்றும் கரூர் மாவட்ட செயலாளர். முனைவர். திரு.அபுல் ஹசேன் அவர்களும், செய்தி மற்றும் ஊடக துறை தலைவர் திரு. ராஜ் குமார், கரூர் நகர தலைவர் திரு.சபீர் , கரூர் நகர துணை செயலாளர் திரு. லோகேஷ் , மற்றும் கட்சி உறுப்பினர்கள் நாளை (25.09.2019) நடைபெறும் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிபெற அனைவரும் ஆதரவு தருமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.