இந்தியா ஒரு விவசாய நாடு.. இப்பொழுது இந்தியாவில் விவசாயம் தலைநிமிர்ந்து நிற்கிறதா? இல்லை….
கடந்த மாதங்களில் இந்தியா மிகச் சரியாகச் சொன்னால் அனைத்து துறைகளிலும் சரிவை நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம் முக்கியமாக விவசாயத்தில் முற்றிலுமாக அழியும் என்று அனைத்து மக்களின் மனதிலும் இருக்கக்கூடிய ஒரு விஷயம். அப்படி இருக்கும் பொழுது ஏன் இந்த நாட்டின் மக்கள் இந்திய நாட்டின் முதுகெலும்பாக விவசாயத்தை முன்னிலைப்படுத்தி எந்த செயலும் செய்யக் கூடாது?…
இதையெல்லாம் விட்டு விட்டு ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியடைந்து விட்டது இவ்வளவு மக்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்… மற்ற துறையினருக்கும் இதே நிலைமை தான் என்று எதற்காக நாம் கவலைப்பட வேண்டும்..
எனக்கு தெரிந்து ஒரு நாடு வெறும் கால்நடைகளை வைத்துக்கொண்டு உலகளவில் பொருளாதாரத்தில் பங்கேற்று வருகிறது…
ஏன் இந்த இந்திய பாரதம் மட்டும் விவசாயத்தை நோக்கி செல்ல மறுக்கிறது…
இதற்கான தெளிவான விடயம் கிடைத்துவிட்டால் இந்தியாவை அழிக்க எந்த நாடும் முன்வராது…
எதிர்காலத்தில் இந்த விவசாயம் கூட கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சென்றுவிடும் போலிருக்கிறது இந்த அகண்ட பாரதத்தில்……
–
முனைவர் க. பாலமுருகன்,
ஆசிரியர் – இளைஞர் குரல்.