*திண்டுக்கல் :
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்*
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் 21.09.2019 ம் தேதியன்று மானா மூனா கோவிலூர் அருகே உள்ள குளத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் அவர்களின் தலைமையில் நகர் மற்றும் ஆயுதப் படை துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆயுதப்படை¸ ஆய்வாளர்கள்¸ சார்பு ஆய்வாளர்கள்¸ காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் ஆகியோர்கள் ஒன்றிணைந்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். இப்பணியில் ஈடுபட்ட காவல்துறையினரை அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினார்.