பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆய்வாளர் திருமதி.மு.கௌசர் நிஷா.(ACTU)
கரூர்.28.09.19.
கரூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு. (ACTU) ஆய்வாளர் திருமதி மு.கௌசர் நிஷா.
அவர்கள் லாலாபேட்டை காவல் நிலைய சரகம் மகாதானபுரம் பகுதியில் உள்ள பெண்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வும். மனிதகடத்தல் மற்றும் குழந்தை கடத்தல் பற்றிய விழிப்புணர்வையும், குழந்தைகளுக்கு பாதுகாப்பான தொடுதல் மற்றும் பாதுகாப்பு அற்ற தொடுதல் பற்றிய விழிப்புணர்வும் அளிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான குற்றத்திற்கு 1098 பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 1091 என்ற இலவச தொலைபேசி எண்கள் உள்ளன எனவும் அவற்றை அனைவரும் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினார். சுமுகமான குடும்ப உறவுகள் பற்றியும் அவற்றில் ஏற்படும் பிரச்சினைகளை காவல்துறை உதவியுடன் அணுகும் முறை பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார்.