இயற்கையின் நண்பர்கள், JCI Karur CITY, கரூர் மாவட்டச் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் KSV மேல்நிலைப்பள்ளி ஆகியோர் KSV மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களுடன் இணைந்து இன்று காலை 8 மணிக்கு ஆனந்தகவுண்டனூர் மற்றும் பொரணி குளங்களில் பனைவிதை நடப்பட்டது.
பனைவிதை நடும் நிகழ்வை உதவி இயக்குனர்(பஞ்சாயத்து) திரு.உமாசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் KSV மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. பத்மநாபன், ஜேசிஜ கரூர் சிட்டி இயக்கக்கிளையின் தலைவர் ஜேசி.அருள்குமார், கல்வி தொலைக்காட்சி ஊடக ஒருங்கிணைப்பாளர் திரு.திருநாவுக்கரசு, மாவட்டச் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள், இயற்கையின் நண்பர்கள் அமைப்பின் உறுப்பினர்கள், ஜேசிஐ பொறுப்பாளர்கள் மற்றும் KSV மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள், நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.