அபு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் திரு. அபுபக்கர் ( வயது – 19 ) த/பெ. சையது அவர்கள் மகன் சாலை விபத்தில் சிக்கி ஒரு கால் இழந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தோம். அதன் பலனாக
1. திரு. அன்சாரி ( மலேசியா ?? ) அவர்கள் உடனே 20,000/- ரூபாய் மருத்துவ செலவிற்கு அளித்துள்ளார்.
2. எ.ஆர்.எஸ் கல்லூரி தாளாளர் திருமதி ரீகானா பேகம் அவர்கள் ரூபாய் : 50,000/- மருத்துவ செலவை ஏற்றுக்கொண்டார்.
3. திரு. இதிரீஸ் அவர்கள் ரூபாய் 10,300/- அளித்துள்ளார்
4. பெயர் தெரியாத நபர் ரூபாய் 3000/- அளித்துள்ளார்.
இதை நேற்று இரவு திரு. சையத் அவர்களிடம் மருத்துவ செலவிற்கான ஆவணங்களும் , பணமும் நமது அறக்கட்டளையின் தலைவர் முனைவர் அ.அபுல் ஹசேன் , எ.ஆர்.எஸ் கல்லூரி தாளாளர் திருமதி. ரீகானா பேகம் , அறக்கட்டளையின் உறுப்பினர் திரு. சபீர் ஆகியோர் மூலம் வழங்கப்பட்டது.
தக்க சமயத்தில் உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தங்களால் இயன்ற உதவி செய்ய வேண்டி விரும்பி கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
நன்றி,
இளைஞர் குரல்.
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்