-
அனைவருக்கும் வணக்கம் ?. அபு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் திரு. அபுபக்கர் ( வயது – 19 ) த/பெ. சையது அவர்கள் மகன் சாலை விபத்தில் சிக்கி ஒரு கால் இழந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் என்று முகநூல் மற்றும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தோம். அதன் பலனாக
*1. திரு. அன்சாரி ( மலேசியா ?? ) அவர்கள் உடனே 20,000/- ரூபாய் மருத்துவ செலவிற்கு அளித்துள்ளார்.*
*2. எ.ஆர்.எஸ் கல்லூரி தாளாளர் திருமதி ரீகானா பேகம் அவர்கள் ரூபாய் : 50,000/- மருத்துவ செலவை ஏற்றுக்கொண்டார்.*
*3. திரு. இதிரீஸ் அவர்கள் ரூபாய் 10,300/- அளித்துள்ளார்*
*4. பெயர் தெரியாத நபர் ரூபாய் 3000/- அளித்துள்ளார்.*
இதை நேற்று இரவு திரு. சையத் அவர்களிடம் மருத்துவ செலவிற்கான ஆவணங்களும் , பணமும் நமது அறக்கட்டளையின் தலைவர் முனைவர் அ.அபுல் ஹசேன் , எ.ஆர்.எஸ் கல்லூரி தாளாளர் திருமதி. ரீகானா பேகம் , அறக்கட்டளையின் உறுப்பினர் திரு. சபீர் ஆகியோர் மூலம் வழங்கப்பட்டது.
தக்க சமயத்தில் உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.தங்களால் இயன்ற உதவி செய்ய வேண்டி விரும்பி கேட்டுக்கொள்ளப்படுகின்றது. நன்றி…. மேலும் விவரங்கள் தொடர்புக்கு :9842424948, 9894829189
Home / இந்தியா / உதவி செய்தவர்கள் மற்றும் செய்துகொண்டிருப்பவர்களுக்கு எங்களுடைய கண்ணீரை நன்றியாக காணிக்கையாக்குகிறோம்
Check Also
Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…
Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது …