சென்னை:
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. முக்கியமாக கடந்த வாரம் முழுக்க பெங்களூர் மற்றும் ஓசூர் எல்லையில் விடாமல் மழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் தற்போது தமிழ்கத்திலும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. வரும் நாட்களில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எப்படி அதன்படி வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சில உல் மாவட்டங்களில் கனமழை பெய்யும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வேலூர், திருவண்ணாமலையில் இன்று மாலைக்கு மேல் மழை பெய்ய
வேறு எங்கு திருச்சி, அரியலூர், பெரம்பலூர் இன்று இரவு கனமழை பெய்யும்.
டெல்டா மாவட்டங்களில் சாரல் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் எல்லாம் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சேலத்தில் நேற்று இரவில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. அங்கு இன்று மழை தொடரும்.நேற்று சேலம் சங்ககிரியில் அதிகபட்சமாக 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இன்றும் அதே அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
எப்படி ஆனால் சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்பில்லை. சென்னையில் வானம் மாலைக்கு மேல் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் புழுக்கமான வானிலையே நாள் முழுக்க காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.