நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஆண்டே திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
திருமணத்தை தமிழகத்திலோ, கேரளாவிலோ நடத்த அவர்கள் விரும்பவில்லையாம். மாறாக வட இந்தியா அல்லது வெளிநாட்டில் திருமணம் செய்து கொள்ள நயனும், விக்கியும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
பாலிவுட் பிரபலங்கள் சிலர் வெளிநாடுகளில் திருமணம் செய்து கொள்ளும் நிலையில் நயன்தாராவும் அப்படியே செய்ய விரும்புகிறார் போன்று. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணத்தை பற்றி யோசிப்பதே அவர்களின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
விக்னேஷ் சிவன் ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் என்ன போஸ்ட் செய்தாலும் அன்பான இயக்குநரே எங்கள் தலைவியை எப்பொழுது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று ரசிகர்கள் கேட்பார்கள். நயன்தாரா பாவம், காதலோடு விட்டுவிடாதீர்கள், அவரை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.