வைகை ஆற்றில் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் ஆற்றில் கொட்டும் கழிவுகள் குறித்து ஆய்வு நாள்.4.12.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் இடம்: குருவிக்காரன் சாலை வைகை ஆற்றில் வைகை ஆற்றில் கொட்டப்பட்டிருக்கும் கழிவுகள் குறித்து நேரடி ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் அருகில் இருக்கும் டாஸ்மாக் பிளாஸ்டிக் கிளாஸ் மற்றும் உடைத்து போடப்பட்ட கண்ணாடி பாட்டில்கள் ,நெகிழி குப்பைகள், இருசக்கர வாகன உடைந்த பிஸாஸ்டிக்கள்,தெர்மாக்கூள் , மருந்து குப்பிகள், பயண்படுத்தப்பட்ட ஊசிகள்,சிரஞ்சுகள்,பிஞ்ச செருப்புகள், பழைய தலையனைகள், மெத்தைகள், பழைய துணிகள், பழைய தகரங்கள், உடைந்த போன பொம்மைகள், பழைய சாமி புகைப்படங்கள் கண்ணாடியுடன்,அதிக அளவில் ஆனா மாத்திரைகள் உட்பட நிறுவனங்கள், டாஸ்மாக் பார் குப்பைகள், பொதுமக்கள் வீட்டு குப்பைகள் சுவரின் மேல் இருந்து வைகை ஆற்றில் கொட்டப்பட்டு இருந்தன.
ஆற்றில் சுவர்கள் எழுப்ப பட்டு இருந்ததால் மக்கள் கொட்டிய குப்பைகள் அப்படியே நிறம்பி கிடைக்கிறது. மதுரை மாநகராட்சி பராமரிப்பில் இருக்கும் மதுரை நகரில் எல்லா இடங்களிலும் குப்பைகள் உள்ளன.மாநகராட்சி பணியாளர்கள் ஆற்றில் உள்ளே இறங்கி தூய்மை பணி மேற்கொள்வது இல்லை. தற்போது தண்ணீர் செல்வதால் குப்பைகள் கொஞ்சம் அடித்து செல்கிறது. மற்றபடி நெகிழி பைகள் ஆற்றில் நிறைந்த கிடக்கிறது. இப்படியே அகற்றாமல் விட்டால் நெகிழி மலைபோல குவிந்து கிடக்கும். மதுரை மண் வளம் பெரிதளவில் பாதிக்கும். ஏற்கனவே கரையில் சுவர்கள் எழுப்ப தோண்டிய போது தோண்ட தோண்ட பாலீத்தின் பைகள் மக்காமல் இருந்தன மேலும் மேலும் குப்பைகள் கொட்ட ஆற்றில் அதிகம் பாலீத்தீன் பைகளே நிறைந்த இருக்கும்.
இந்த ஆய்வில் மதுரை நகரில் ஆற்றின் கரையில் வாழும் மக்கள் வைகை ஆற்றை மிகப்பெரிய குப்பை தொட்டியாக பயண்படுத்தி வருகின்றனர் என்பது தெரிகிறது. ஆற்றை மாசுப்படுத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகராட்சி ஆணையாளர் அவர்களை வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த ஆய்வில் கல்லூரி மாணவர்கள் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் வைகை ராஜன், மணிகண்டன், ஆறுமுகம், இராஜசேகரன், அருன் , ஆகாஷ் உட்பட கலந்து கொண்டனர்.