சந்து கடையை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி காவல் ஆய்வாளரிடம் மனு:
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் கருங்கலாப்பள்ளியில்அரசு மதுபான கடை இருந்தது அந்த கடையில் குடிக்க வருபவர்களால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையிலும் அடிக்கடி சண்டை தகராறு ஏற்பட்டு அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பில்லாத நிலையில் வாழ்ந்து வந்தனர் பிறகு மதுபான கடையை அகற்ற சொல்லி அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அந்த மதுபான கடையை அகற்றப்பட்டது அதற்கு பின்பு தற்போது உள்ள பள்ளியில் அரசு பள்ளி கூடத்திற்கு அருகில் மற்றும் வாய்க்கால் கரையில் இரண்டு இடங்களில் சந்து கடை தனியார் சாராய கடை நடத்தி வருகிறார்கள் இதனால் இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு அடிக்கடி தகராறு ஏற்படும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர் அங்கு குடிக்க வருபவர்கள் சண்டை சச்சரவுகள் அடிக்கடி ஏற்படுகின்றது ஆகையால் சந்து கடையை அகற்ற வலியுறுத்தி கருங்கலாப்பள்ளி cpi-m கிளை செயலாளர் பாண்டியன் தலைமையில் மற்றும் ஊர் பொதுமக்கள் குளித்தலை காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் பெண்கள் குழந்தைகளுக்கு புதிய பாதுகாப்பு அளித்திட வேண்டுமெனவும் உடனடியாக சந்து கடை (சாராயகடை) யை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியும் குளித்தலை காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக சென்று குளித்தலை காவல் ஆய்வாளர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது
இப்போராட்டத்தில் சிபிஐஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ராஜூ மாவட்ட குழு உறுப்பினர் முத்துச்செல்வன் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர்.