Thursday , November 21 2024
Breaking News
Home / தமிழகம் / தீ விபத்து தடுப்பு பிரச்சாரம் – திருச்சி
MyHoster

தீ விபத்து தடுப்பு பிரச்சாரம் – திருச்சி

தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை, திருச்சி, ஒயிட் ரோஸ் பொது நலச்சங்கம் ஆதரவுடன் தீ விபத்தை தடுக்கும் பிரச்சாரத்தை விபத்து தடுப்பு, முதலுதவி சேவையாளர் சீனிவாச பிரசாத் திருச்சியில் இருந்து துவங்கினார். பிரச்சாரமானது திருச்சி, குடந்தை, மயிலாடுதுறை, திருக்கடையூர், மாணிக்கபங்கு, தரங்கம்பாடி, நாகை, திருச்சி என 18ஆம் தேதியிலிருந்து 20ம் தேதி வரை பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை திருச்சிராப்பள்ளி தலைமை கோட்ட தீத்தடுப்பு மீட்பு பணி துறை திருச்சி போக்குவரத்து காவல் துணை ஆணையர் புளுகாண்டி விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கிவைத்தார்.

தீபாவளியை பாதுகாப்போடு கொண்டாடுங்கள். பட்டாசு வெடிக்கும் போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அருகில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது ஒரு வாலி நீர் எப்போதும் பக்கத்தில் பாதுகாப்பிற்காக இருக்கட்டும். பெரியவர்களின் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசு வெடிக்கச் செய்யுங்கள். மரங்கள், காடுகள் நிறைந்த பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. வெடிபொருட்களை இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது சைலன்ஸரில் படாதவாறு எடுத்துச் செல்ல வேண்டும். மத்தாப்பு, தரைச் சக்கரம் போன்றவற்றை வீட்டிற்குள் வைத்துக்கொளுத்தக்கூடாது. எதிர்பாராத விதமாக தீப்பற்றினால் கீழே படுத்து உருள வேண்டும். மேலும் வெடிபொருள் விதி 2008 எண் 70ன் படி ஒவ்வொரு பட்டாசுகளை ஏற்றிச்செல்லும் சுமை ஊர்திகளில் 2 கிலோ அளவுள்ள தீயணைப்பு கருவிகள் வைத்திருக்கவேண்டும்.

பட்டாசு ஏற்றிச் செல்லும் சுமை ஊர்தி ஓட்டுனர் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற கூடியவராகவும், பயிற்சி பெற்றவராக இருத்தல் வேண்டும், தீயணைப்பு கருவிகள் எளிதில் பயன்படுத்தும் அளவில் வாகனத்தில் வைத்திருக்க வேண்டும். தாழ்ந்து செல்லக்கூடிய மின் வயர்களால் பெரும்பாலும் பட்டாசு ஏற்றிச்செல்லும் வாகனம் தீப்பற்றி வருகிறது .எனவே குறிப்பிட்ட உயரத்திற்கு விதிகளுக்குட்பட்டு பட்டாசுகளை அடுக்கி வைக்கவேண்டும்.

அதிக சுமைகளை ஏற்றக் கூடாது. பட்டாசு ஏற்றி செல்லும் வாகனத்தில் வெடிபொருள் ஏற்றிச் செல் நம்பரை சுட்டிக்காட்டும் படியாக சிகப்பு கொடிகளை முன்புறம் கட்டி தெரியப்படுத்த வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களைக் கொண்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். தமிழ்நாடு மக்கள் கூட்டமைப்பு குணசீலன்,ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்க மோகன்ராம், ஒயிட் ரோஸ் பொது நல சங்க சங்கர் ,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார், சமூக ஆர்வலர்கள் அய்யாரப்பன், நடிகர் தாமஸ், எழில் ஏழுமலை, ரவி, மக்கள் நலச்சங்க செயலர் செல்லக்குட்டி, சாந்தி, சர்புதீன், பாண்டியன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

Bala Trust

About Admin

Check Also

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES