Wednesday , July 30 2025
Breaking News
Home / கரூர் / கரூரில் இருந்து திருச்சி, திருப்பூருக்கு குளிர் சாதன பேருந்துகள் துவக்கம்
NKBB Technologies

கரூரில் இருந்து திருச்சி, திருப்பூருக்கு குளிர் சாதன பேருந்துகள் துவக்கம்

கரூரில் இருந்து திருச்சி, திருப்பூருக்கு குளிர் சாதன பேருந்துகள் துவக்கம்

கரூர் – 23.10.209
கரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து குளிர்சாதன வசதியுடன் கூடிய 10 புதிய பேருந்துகளை மாண்புமிகு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் திரு.#எம்ஆர்_விஜயபாஸ்கர் அவர்கள் துவங்கி வைத்தார்.

குறைந்த தூர வழித்தடங்களில் மட்டுமே இயங்கக் கூடிய இந்த பேருந்துகளில், கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட கரூர் மண்டலத்துக்கு 6 பேருந்துகளும், காரைக்குடி மண்டலத்துக்கு 1 பேருந்து, திருச்சி மண்டலத்துக்கு 3 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அவை கரூரிலிருந்து திருப்பூர், திருச்சி, ராமேஸ்வரம், தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட வழித்தடங்களிலும், திருச்சியிலிருந்து கோவை, பழனி மற்றும் காரைக்குடியிலிருந்து திருச்சி உள்ளிட்ட 10 வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு.அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாண்புமிகு அமைச்சர், போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நாளை மறுதினம் முதல் போனஸ் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

Bala Trust

About Admin

Check Also

தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…

உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES