கரூர்: கரூர் மாவட்டத்தில், நேற்று வரைவு வாக்காளர் பட்டியலை, கலெக்டர் தங்கவேல் வெளியிட்டார்.அதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில், 99 ஆயிரத்து, 487 ஆண்களும், ஒரு லட்சத்து, 8,908 பெண்களும், மூன்று திருநங்கைகள் உள்பட, இரண்டு லட்சத்து, 8, 398 வாக்காளர்கள் உள்ளனர்.கரூர் சட்டசபை தொகுதியில், ஒரு லட்சத்து, 10 ஆயிரத்து, 570 ஆண்களும், ஒரு லட்சத்து, 22 ஆயிரத்து, 980 பெண்களும், 27 திருநங்கைகள் உள்பட, இரண்டு லட்சத்து, 33 ஆயிரத்து, 577 வாக்காளர்கள் உள்ளனர்.கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டசபை தொகுதியில், ஒரு லட்சத்து, ஆயிரத்து, 98 ஆண்களும், ஒரு லட்சத்து, ஆறாயிரத்து, 94 பெண்களும், 35 திருநங்கைகள் உள்பட, இரண்டு லட்சத்து, ஏழாயிரத்து, 227 வாக்காளர்கள் உள்ளனர்.குளித்தலை சட்டசபை தொகுதியில், ஒரு லட்சத்து, ஒன்பதாயிரத்து, 158 ஆண்களும், ஒரு லட்சத்து, 14 ஆயிரத்து, 61 பெண்களும், இரண்டு திருநங்கைகள் உள்பட, இரண்டு லட்சத்து, 23 ஆயிரத்து, 221 வாக்காளர்கள் உள்ளனர்.கரூர் மாவட்டத்தில் உள்ள, நான்கு சட்டசபை தொகுதியில், நான்கு லட்சத்து, 20 ஆயிரத்து, 313 ஆண்களும், நான்கு லட்சத்து, 52 ஆயிரத்து, 43 பெண்களும், 67 திருநங்கைகள் உள்பட, எட்டு லட்சத்து, 72 ஆயிரத்து, 423 வாக்காளர்கள் உள்ளனர்.அதேபோல், அரவக்குறிச்சி தொகுதியில், 253 ஓட்டுச்சாவடிகளும், கரூர் தொகுதியில், 268 ஓட்டுச்சாவடிகளும், கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில், 260 ஓட்டுச்சாவடிகளும், குளித் தலை தொகுதியில், 270 ஓட்டுச்சாவடிகள் உள்பட, 1,051 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மற்றும் இடமாற்றம் குறித்த மனுக்களை நேற்று முதல் வரும் டிச., 12 வரை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளில், காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை வழங்கலாம்.மேலும் அதற்கான சிறப்பு முகாம்கள் வரும் நவ., 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் அந்தந்த ஓட்டுச் சாவடிகளில் நடக்க உள்ளது.
அதில், காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை பொதுமக்கள் மனுக்களை அளிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜன., 5ல் வெளியிடப்படுகிறது.மேலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், https://voterportl.eci.gov.in என்ற இணையதளம் மூலமும், voter Helpline என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணபிக்கலாம். வாக்காளர் பட்டியல் தொடர் பான புகார்களை, 1950 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம்.வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் தி.மு.க., சார்பில், மாநில சட்டத்துறை இணைச்செயலாளர் மணிராஜ், அ.தி.மு.க., சார்பில், மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, தெற்கு நகர செயலாளர் ஜெய ராஜ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.