திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் நாணயங்களை அறிமுகப்படுத்திய டிரான்ஸினிஸ்ட்ரியா நாடு நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. முதன்முறையாக புதுமையான நாணய அலகுகளை வடிவமைத்து ட்ரான்ஸ்னிஸ்டரியா நாடு பிளாஸ்டிக் நாணயங்களை ஒரு ரூபிள் முதல் பத்து ரூபிள் வரை பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியிட்டுள்ளது. ஒரு ரூபிள்பிளாஸ்டிக் நாணயம் 26 மில்லி மீட்டர் வட்டம் வடிவம் கொண்டது. பழுப்பு மஞ்சள் நிறம் கொண்டது. மூன்று ரூபிள் பிளாஸ்டிக் நாணயம் 26 மில்லி மீட்டர் சதுர வடிவம் ஆகும். பச்சை நிறம் கொண்டது. ஐந்து ரூபிள் பிளாஸ்டிக் 28 மில்லி மீட்டர் அகலம் கொண்டதாகும். நீல வண்ண முடையதாகும். பத்து ரூபிள் பிளாஸ்டிக் நாணயமானது 28 மில்லி மீட்டர் அறுகோண வடிவம், சிவப்பு வண்ணம் கொண்டதாகும். உலோக நாணயங்களை உற்பத்தி செய்வதற்கும் சிறிய மதிப்புள்ள பிரிவுகளுக்கான பொது தேவையை பூர்த்தி செய்வதற்கு மாற்றாக பிளாஸ்டிக் நாணயங்கள் பார்க்கப்படுகிறது. டிரான்ஸ்னிஸ்டிரியா நாட்டில் முதல் முறையாக ஒரு சோதனையாக பிளாஸ்டிக் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் நூலினை வெளியிட சந்திரசேகரன் பெற்றுக்கொண்டார் செயலாளர் குணசேகரன், பொருளாளர் அப்துல் அஜீஸ், முகமது சுபேர், கமலக்கண்ணன், சந்திரசேகரன், சாமிநாதன், இளங்கோவன், யோகேஷ், முகமது இஸ்மாயில், லிங்க ராஜன், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட பலர் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
Check Also
Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…
Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது …