Friday , December 19 2025
Breaking News
Home / கரூர் / தமிழ்நாடு இளைஞர் கட்சி குளித்தலை பகுதி செயலாளர் &குளித்தலை பகுதி இளைஞர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு
NKBB Technologies

தமிழ்நாடு இளைஞர் கட்சி குளித்தலை பகுதி செயலாளர் &குளித்தலை பகுதி இளைஞர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு

தமிழ்நாடு இளைஞர் கட்சி குளித்தலை பகுதி செயலாளர் &குளித்தலை பகுதி இளைஞர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கடம்பை P. பிரபாகரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக 12/11/2019 குளித்தலை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் குளித்தலை  சுங்க கேட் பகுதியில் நான்கு திசைகளிலும் உள்ளே வரும் வாகனங்களுக்கும் வெளியே செல்லும் வாகனங்களுக்கு வழிகாட்டும் பலகையும் மற்றும் தந்தை பெரியார் பாலத்தில் பழுதுகளை சரி செய்யவும்  மனு கொடுக்கப்பட்டது..

மனுவின் விபரங்கள்

குளித்தலை சுங்க கேட் பகுதியில் திருச்சி கரூர் மற்றும் மணப்பாறை முசிறி பகுதியிலிருந்து வரும் வாகனங்களுக்கு எதிர்திசையில் செல்லக்கூடிய வகையில் எந்த இடத்திலும் வழிகாட்டும் பலகை வைக்கப்படவில்லை இதனால் ஓட்டுநர்களும் பொதுமக்களும் மிகவும் குழப்பம் அடைகின்றனர் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலைகளில் நாள்தோறும்

சென்றுகொண்டிருக்கிறது . இதனால் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் சாலையிலும் முசிறி செல்லும் சாலையிலும் திருச்சி செல்லும் சாலையிலும் மற்றும் கரூர் செல்லும் சாலையிலும் உள்ளே வரும்போதும் நகரை விட்டு வெளியே செல்லும் போதும் அனைத்து ஊர்களுக்கும் செல்ல கூடிய வகையில் அனைத்து ஊர் பெயர்களுடன் கூடிய வழிகாட்டி பலகை வைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது…

மேலும் குளித்தலை நெடுஞ்சாலைத்துறை உட்பட்ட தந்தை பெரியார் பாலத்தில் கான்கிரீட் தெரியும் அளவிற்கு ரோடுகள் பெயர்ந்து உள்ளன கம்பிகள் தெரிகிறது இதனால் பல விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது..

பல்வேறு இடங்களில் பள்ளங்களும் ஆங்காங்கே சிறுசிறு பழுது ஏற்பட்டுள்ளது அதை உடனடியாக சரி செய்து மக்கள் பாதுகாப்பான பயணம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டது…

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தினம் அரவக்குறிச்சி நகர தலைவர் திரு. ரயில்வே ராஜேந்திரன் தலைமையில் காந்தி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES