இன்று 19 11 2019
இனை இயக்குனர் மக்கள் நல பணிகள் மருத்துவர் பெறுமதிப்பிற்குரிய.பரமசிவம் தலைமையில் தண்ணார்வ நுகர்வோர் அமைப்புகளின் கூட்டம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சிறுபான்மையினர் நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் டேனியல் சக்கரவர்த்தி அவர்கள் மருத்துவ மனையில் போதிய செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க பட்ட புதிய மருத்துவ மனை கட்டிடத்தில் உடனே உள்கட்டமைப்பு வசதிகள் செய்து நோயாளிகள் குறைகளை போக்க வேண்டும் எனவும். இம்மருத்துவ மனையில் பொது சுகாதாரம் பேணி காக்க பட வேண்டும் எனவும். இம் மருத்துவ மனையின் உள் பக்கம் சுமார் 500க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்க படுவதால் நோயாளிகளின் பாதிப்பு ஏற்படுகிறது எனவும் தனது கோரிக்கை விடுத்து பேசி இது குறித்து மனுவை மதிப்பிற்குரிய இனை இயக்குனர் மருத்துவர் பரமசிவம் அவர்கள் பெற்று கொண்டு மனுவை பரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் மேலும் இக்கூட்டத்தில் மருத்துவர்கள் மருத்துவ மனை அலுவலர்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Check Also
இன்று சூளகிரி இல் பல்வேறு திருமண நிகழ்ச்சிகளில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ செல்லக்குமார் ஐயா…
இன்று சூளகிரி இல் பல்வேறு திருமண நிகழ்ச்சிகளில் நமது கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ செல்லக்குமார் ஐயா அவர்களும் …