இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அசஞ்சர் நிறுவனம், பெட்கிராட் தொழில் பயிற்சி பள்ளி இணைந்து காய்கறி பழங்கள் பதப்படுத்துதல், சிறுதானிய உணவு பொருட்கள் தயாரித்தல் போன்ற இலவச சுயதொழில் பயிற்சி துவக்க விழா மதுரை கோ.புதூர் வண்டிப்பாதை மெயின் ரோடு பகுதியில் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பெட்கிராட் பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார்.
இ.டி.ஐ.ஐ முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து பேசுகையில் :- பயிற்சி பெற்ற பின்பு நல்ல தொழில் முனைவோராக மாறுவதற்கான தகுதிகள் செயல்பாடுகள் சந்தைப்படுத்துதல் அதைத்தொடர்ந்து ஆன்லைன் வியாபாரம் வரை திறமையுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என பேசினார்.
மதுரை மாவட்ட தொழில் மைய அலுவலர் சாமுவேல் ராஜா பேசுகையில், மானியத்துடன் சுய தொழில் துவங்க மத்திய,மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்கள் சிறந்த தொழில் முனைவோராக மாறுவதற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக பேசினார்.
சௌத் இந்தியன் வங்கி மேலாளர் மீனாட்சி சுந்தரி பேசுகையில், தொழில் துவங்க அதிக அளவில் மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்க வங்கிகள் தயாராக இருப்பதாகவும் வாய்ப்பை பெண்கள் முறையாக பயன்படுத்தி தொழில் முனைவராக மாற வேண்டும் எனவும் முத்ரா லோன் வாங்குவதற்கான தகுதியை பெண்கள் பெற வேண்டும் என பேசினார்.
பெட்கிராட் துணைத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் பேசுகையில், பகுதியில் உள்ள அனைத்து பெண்களும் தங்களது தேவைக்கான பொருட்களை சொந்தமாக உற்பத்தி செய்து வாழ்க்கையில் உயர வேண்டும் என கூறினார்.
நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் திவ்யா மற்றும் கார்த்தியாயினி ஆகியோர் நன்றி கூறினர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்