
மதுரை கே.கே நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் நடத்திய நிகழ்வில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவன் ஹரிஷ்ராஜ் என்பவர் ஐந்து படிநிலைகளைக் கொண்ட 100 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை அபாகஸ் முறையை பயன்படுத்தி மூன்று நிமிடங்கள் மற்றும் 30 நொடிகளில் தீர்த்து சோழன் உலக சாதனை படைத்தார்.இதை கண்காணித்து உறுதி செய்தார் நடுவர் சிவசங்கரன் அவர்கள்.
மேலும்,ஒரே நாளில் 20,000 அஞ்சல் அட்டைகளில் பெறுநர் அனுப்புனர் என்று தமிழில் முகவரி எழுதி தமிழகத்தில் உள்ள 20,000 முகவரிகளுக்கு அனுப்பியதன் மூலம் படைக்கப்பட்ட சோழன் உலக சாதனை நிகழ்வில் பங்கு கொண்ட நூறு சாதனையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
சோழன் உலக சாதனை படைத்த அனைவருக்கும் சிவகங்கை தேவஸ்தான சமஸ்தானத்தின் இளைய மன்னர் மாண்புமிகு மகேஷ் துறை அவர்கள், வழக்கறிஞர் ராம் பிரபாகர் தொழிலதிபர் கரு புகழீஸ்வரன், மருந்தாளுனர் நீலமேகம் ராஜன், மருத்துவர் ஆர்த்தி, மருத்துவர் பாலாஜி, போன்றோர் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்கள்.
இந்நிகழ்வில் இயன்முறை மருத்துவர் பெஞ்சமின், தென் மண்டல தலைவர் சுந்தர், மதுரை மாவட்டத் தலைவர் சண்முகவேல், தலைமைச் செயற்குழு உறுப்பினர்களான பால்பாண்டி மற்றும் ரகு டேவிட்சன், கோவை மாவட்டத் தலைவர் பாலமுரளி கிருஷ்ணன், சமூக ஊடகங்களின் பொறுப்பாளர் சிவசங்கரன்,வழக்கறிஞர் நவீன் சேதுபதி, நாகை மாவட்டத் தலைவர் முஜிபு ஷரிக், திருச்சி மாவட்டப் பொதுச் செயலாளர் பிரபாகரன் மற்றும் தலைமைச் செயற்குழுவின் பொதுச் செயலாளர் ஆத்திகா நிமலன் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் ஒருங்கிணைத்தார்.