இந்திய குடியரசு தினம் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது .
இந்தியாவில் சுமார் 200 நூற்றாண்டுகளுக்கும் மேல் நிடித்து வந்த ஆங்கிலேயரின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் கழகங்ளையும் , புரட்சிகளையும் , அகிம்சை வழியில் பல போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும் தேகங்களையும் நமது தாய் நாட்டிற்க்காக அர்பனித்த தேச தலைவர்களையும் வீரர்களையும் புரட்சியாளர்களையும் நினைவு கூறும் நாள் குடியரசு தினமாகும்.
ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஓற்றுமையாக இல்லாமல் இந்தியாவை சிறு சிறு மாநிலங்களை பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால் வணிகம் செய்வதற்க்காக இந்தியாவில் நூழைந்த பிரிட்டிஸ் காரர்கள் படிபடியாக தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர் அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து. வளர்ச்சிக்கு அடையாளம் என கருதி டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் அவர்களின் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்ற பட்டு 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாக கொண்டாடபடுகிறது .
மேலும் அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்தியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி பாரத மண்ணில் ஓவ்வொரு மனிதனும் சுதந்திர காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் விடுமுறை அளிக்க பட்டு நாடெங்கும் அணைத்து பள்ளிகளிலும் கல்லுரிகளிலும் அலுவலகங்ளிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடபட்டு வருகிறது .
எனவே : இந்திய மக்கள் அணைவருக்கும் குடியரசு தினம் நல் வாழ்த்துக்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.