மதுரை கே.புளியங்குளம் வீரதண்ட கோயிலுக்கு செல்வதற்கு பொதுமக்கள் தங்களது செலவில் பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்க கோரி அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி மனு வழங்கினார்
மதுரை, ஜனவரி.09-
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அப்துல் கலாம் அறிவியல் சங்க மாநிலத் தலைவர் ஆபேல் மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில்,
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கே.புளியங்குளம் வீரதண்ட கோயில் உள்ளது. இந்த கோயிலில் 800-க்கும் மேற்பட்டோர் தங்களது குலதெய்வமாக சுவாமியை வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலுக்கு செல்லும் பாதையில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது.
அந்தப் பள்ளம் அரசாங்க புறம்போக்கு இடத்தில் வருகிறது. இந்த கோவில் செக்கானூரணியில் உள்ள கேரன் பள்ளியை ஒட்டி உள்ளது. பக்தர்கள் நடந்து செல்லும் இந்த பாதையில் பெரிய மெகா பள்ளம் உள்ளதால் தங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்ய போக முடியவில்லை.
எனவே பொதுமக்கள் தங்கள் செலவில் சிறு பாலம் கட்ட விரும்புகிறார்கள். எனவே இந்த பாலம் கட்டிக் கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.
இக்கூட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.