*குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் : அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !*
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
விருதுநகர் மாவட்டம் . சிவகாசி அருகே கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளின் மகள் 8 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யபட்டு கொடூரமான முறையில் படு கொலை செய்ய பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதணை அளித்துள்ளது . மேலும் இந்த படு கொலை சம்பவத்தை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது .
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு குற்றங்கள் அதிகரித்து வரும் வண்ணமாக உள்ளது. இது போன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றவர்களை காவல் துறை சட்டபடி நடவடிக்கை எடுத்து போக்ஸோ சட்டத்தில் கைது செய்வதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்கிறது . மேலும் இது போன்ற கொடூர சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மக்களுக்கிடையே முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் தமிழக அரசை வலியுறுத்துகிறது .
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.
எனவே : உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் நிவாரணம் 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இது போன்ற குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு படு கொலைகளில் ஈடுபடுகின்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட பேரைவையில் புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .