Friday , November 22 2024
Breaking News
Home / செய்திகள் / பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் வளசை முத்துராமன் ஜி பொங்கல் வாழ்த்து..!
MyHoster

பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் வளசை முத்துராமன் ஜி பொங்கல் வாழ்த்து..!

பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான வளசை. முத்துராமன் ஜி பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :-

அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சங்க காலத்திலிருந்து கொண்டாடப்படும் தமிழர்களின் தைப்பொங்கல் பல வரலாறு மிக்க தமிழன் கதிரவனின் ஒளியினால் தான் பயிர்கள் வளர்கின்றன என்றும் காய்கறிகள் காய்க்கிறது என்றும் துல்லியமாக கணித்தார்கள். அதனால்தான் கழனியில் விளைந்த கதிரை பறித்து கதிரவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.

மருத நிலத்தில் வாழ்ந்த மக்கள் மிகவும் உணர்ச்சியாக கொண்டாடினார்கள் தை1 முன்தினம் போகி பன்டிகை ஆயர்கள் கொண்டாடினார்கள் என்ற வரலாறும் சொல்லப்படுகிறது.தை1 ஆம் நாள் சூரிய நாராயணன் என்ற பெயரில் நாமும் வழிபட காரணமானது. அந்தக் கால நெல் விதைகள் அறுவடை செய்ய குறைந்தது ஆறு மாத காலங்கள் ஆகும் அதாவது ஆடியில் விதைத்தால் மார்கழி அறுவடை செய்து வீட்டுக்கு கொண்டு வரும் காலமே தைப்பொங்கல் ஆனது.

அதனால் தான் நம் தமிழ்நாட்டில் பழமொழி தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அரசருக்கு வரியாக செலுத்தியது நெல் போக மீதி இருக்கும் நெல்லை விற்பதற்கும் வீட்டுக்கு எடுத்து வந்து அரிசி ஆக்கி புது மண் பானையில் பச்சரிசி வெல்லம் பால் நெய் முந்திரி பருப்பு கலந்து பொங்கல் வைப்பது மட்டுமல்லாமல் கரும்பு இலை, மஞ்சள் அனைத்து பொருளுமே புதுசாக இட்டு பொங்கல் உருவாக்கி மனிதனுக்கும் மாட்டுக்கும் கொடுத்து மகிழ்ந்து வந்தார்கள் நம் தமிழர்கள்.

அது மட்டுமல்லாமல் போகி பண்டிகை அன்று பழையதை எரிக்கும் சடங்காக கொண்டாடினார்கள் அடுத்ததாக மாட்டுப் பொங்கல் ஊரில் ஒரு பழமொழி உண்டு. நன்றாக உழைக்கும் ஒரு மனிதனைப் பார்த்து மாடு போல் உழைக்கிறான் என்று சொல்வார்கள் அந்த காலத்தில் மனிதனுக்கு மேலாக மாடுகள் தான் உழைத்தன. உழைத்த மாட்டை பெருமை படுத்தும் விதமாக மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு பெயிண்ட் அடித்து சந்தனம் குங்குமம் சாத்தி கலப்பைகளையும் நன்றாக சுத்தம் செய்து அதற்கும் சந்தனம் குங்குமம் விட்டு உழவுக்கு உறுதுணையாக இருந்த அத்தனை பொருளையும் மதித்தார்கள்.

ஏறு தழுவுதல் மஞ்சு விரட்டு என்று கி.மு 2000 முன்பு இருந்த தமிழர்களின் வீர விளையாட்டை ஜல்லிக்கட்டு என்று மாற்றியவர்கள் நாயக்கர் மன்னர்கள். பழந்தமிழ் இலக்கியங்கள் பல இடத்தில் சொல்லப்பட்டுள்ளன அதுபோல் சொல்லால் தரப்பட்டவள் என்ற கலிப்பாடல்,

ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்று குறிப்பிடுகிறது. திவ்ய பிரபந்தத்தில் கூட திருமங்கை ஆழ்வார்.அம்பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள்
கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான்
நெம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும்
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்த வாறே” தன் மாமன் மகளான நப்பினையா பகவான் கிருஷ்ணன் ஏழு காளைகளை அடக்கி மணமுடித்தார் என்கிறார்.

தில்(புறம்:22)
என்ற புறநானூற்றுப் பாடல் தைத்திருநாளில் செந்நெல்லினை அறுத்து கரும்பினைக் கட்டி அந்த இடத்தில் நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும்,கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன என்று கூறுகிறார் திருமங்கை ஆழ்வார்

வரலாற்றுச் சான்றுகள்:

பழங்காலப் பெண்கள் தை மாதத்தில் நோன்பிருந்த செய்திகளை சங்க இலக்கியங்கள் சில குறிப்பிட்டிருக்கின்றன. தை மாதத்தில் நோன்பிருந்து, வைகை ஆற்றில் நீராடி, சிறந்த கணவர் வாய்க்கப்பெற வேண்டும் என பெண்கள் வேண்டியதாக ‘பரிபாடல்’ கூறுகின்றது.
‘தீயெரிப் பாலுஞ் செறிந்த முன் பூற்றியோ
தாயருகா நின்று தவத் தைந்நீராடல்
நீயுரைத்தி வையை நதி’

       (பரிபாடல்:11)என் 

தமிழர்களின் இந்த பாரம்பரியத்தை பொங்கல் தமிழ்நாட்டு மட்டுமல்லாமல் அறுவடை கர்நாடகா ஆந்திரா மகா சங்கராந்தி என்ற பெயரிலும் ஜனவரி 13 இல் பஞ்சாப் மற்றும் அரியானா லோஹ்ரி, ஜனவரி 14 15 அசாம் மாநிலத்திலும் மாஹ் பிகு என்ற பெயரில் நெல் அறுவடை திருவிழா நடைபெறுகிறது.

கிரேக் எகிப்து ரோம ஜப்பானியர்கள்
டோரினோய்ச்சி என்றும் கொரியாவில் சூசாக் என்றும் ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் மூன்று நாள் திருவிழாவாகவும் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட்கிழமை சீனாவில் நிலா விழா என்ற பெயரில் அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது.

உணவுக்கு இல்லாமல் உயிரினம் வாழ முடியாது என்பதை தெரிந்து தான் திருவள்ளுவர் உழவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்
திருக்குறள் சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
பல தொழில் செய்து சுழலும் இவ்வுலகத்தில் ஏர்ப்பிடிக்கும் தொழிலை பின்பற்றி தான் உலகம் சுற்ற வேண்டியிருக்கிறது. துன்பங்கள் பலயானும் உழவுத் தொழிலே உலகத்தில் சிறந்தது என்பது வள்ளுவன் வாக்கு. இப்படி பல ஆழ்வார்களும் நாயன்மார்களும் தை திருநாளை போற்றி புகழ்ந்து கூறியுள்ளார் என்பது தமிழர்களுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

அப்படிப்பட்ட தருணத்தில் தமிழ்நாட்டில் ஒரு எம்.பி கூட இல்லாத போதிலும் தமிழ்நாட்டுக்கு இரண்டு லட்சத்தி 70 ஆயிரம் கோடிய அளவுக்கு தமிழர்களின் முன்னேற்றத்துக்காக அள்ளி கொடுத்த நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சார்பாகவும், மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் சார்பாகவும், மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் அவர்கள் சார்பாகவும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பாஜக விவசாய அணி மாநில துணைத் தலைவர் வளசை முத்துராமன் கூறியுள்ளார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES