Saturday , December 20 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்ட தொழில் மையம் சார்பாக மனித நேய வார விழா..!
NKBB Technologies

மதுரை மாவட்ட தொழில் மையம் சார்பாக மனித நேய வார விழா..!

மதுரை மாவட்ட தொழில் மையம் சார்பாக மனித நேய வார விழா மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் எஸ்.கணேசன் தலைமையிலும், பெட்கிராட் தலைவர் எஸ்.கிருஷ்ணவேணி, பொருளாளர் ஜி.சாராள்ரூபி ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது.

பொதுச்செயலாளர் எஸ்.அங்குசாமி வரவேற்று பேசினார். பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராம் துவக்க உரையாற்றினார்.

மாவட்ட தொழில் மைய
துணை பொதுமேலாளர் எம்.ஜெயா மனித நேய செயல்கள் குறித்து விளக்கி பேசினார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் எஸ்.கணேசன் கூறியதாவது :- முதியோர் இல்லங்களில் தாய் தகப்பனாரை விட வேண்டாம் எனவும், வீட்டிலும் வெளியிலும் அலுவலகத்திலும் மனித நேயம் உள்ளவர்களாக நாம் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என பேசினார்.

கதர் கிராம தொழில் ஆணையம் உதவி இயக்குநர் செந்தில்குமார் பேசுகையில் :- சுயதொழில் துவங்க 35 சதவிகிதம் வரை மானியத்துடன் கடன் பெறலாம் என கூறினார்.

இதில் பயிற்சியாளர்கள் விஜயவள்ளி.,ஷீபா, தீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் கண்ணன் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை குடும்ப நல ஆலோசகர் கதிரவன் சிறப்பாக செய்திருந்தார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES