மதுரை மாவட்ட தொழில் மையம் சார்பாக மனித நேய வார விழா மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் எஸ்.கணேசன் தலைமையிலும், பெட்கிராட் தலைவர் எஸ்.கிருஷ்ணவேணி, பொருளாளர் ஜி.சாராள்ரூபி ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது.
பொதுச்செயலாளர் எஸ்.அங்குசாமி வரவேற்று பேசினார். பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராம் துவக்க உரையாற்றினார்.
மாவட்ட தொழில் மைய
துணை பொதுமேலாளர் எம்.ஜெயா மனித நேய செயல்கள் குறித்து விளக்கி பேசினார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் எஸ்.கணேசன் கூறியதாவது :- முதியோர் இல்லங்களில் தாய் தகப்பனாரை விட வேண்டாம் எனவும், வீட்டிலும் வெளியிலும் அலுவலகத்திலும் மனித நேயம் உள்ளவர்களாக நாம் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என பேசினார்.
கதர் கிராம தொழில் ஆணையம் உதவி இயக்குநர் செந்தில்குமார் பேசுகையில் :- சுயதொழில் துவங்க 35 சதவிகிதம் வரை மானியத்துடன் கடன் பெறலாம் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் விஜயவள்ளி.,ஷீபா, தீபா ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் கண்ணன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குடும்ப நல ஆலோசகர் கதிரவன் சிறப்பாக செய்திருந்தார்.