Tuesday , April 22 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை காவல் ஆணையாளர் முனைவர் லோகநாதன் தொடங்கி வைத்தார்

மதுரையில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை காவல் ஆணையாளர் முனைவர் லோகநாதன் தொடங்கி வைத்தார்

மதுரையில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை காவல் ஆணையாளர் முனைவர் லோகநாதன் தொடங்கி வைத்தார்

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக தல்லாகுளம் தமுக்கம் சந்திப்பில் சாலை பாதுகாப்பு மாத தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் தலைமை தாங்கி சாலை பாதுகாப்பு மாத தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை துண்டு பிரச்சார நோட்டீஸ் வழங்கியும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய மஞ்சப்பைகளை வழங்கியும் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் போக்குவரத்து துணை ஆணையர் குமார், பொறுப்பு காவல் கூடுதல் காவல் ஆணையர் திருமலைகுமார் மற்றும் உதவி ஆணையாளர்கள் செல்வம்,மாரியப்பன் மற்றும் போக்குவரத்து கழக கூடுதல் ஆணையர்
சத்யநாராயணன் மற்றும் மதுரை வடக்கு ஆர்.டி.ஓ சித்ரா, தெற்கு ஆர்டிஓ சிங்காரவேலு, மதுரை வாடிப்பட்டி மேலூர் வடக்கு தெற்கு மத்திய பகுதி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாநகர போக்குவரத்து காவல் நிலைய காவலர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆயுதப்படை காவலர்கள் 100 க்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்ட வாகன விற்பனை பிரதிநிதிகள் மற்றும் டூவீலர் மெக்கானிக் அசோசியேசன் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 400 பேர் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வரவனை கிராமத்திற்குட்பட்ட பாப்பனம்பட்டியில் உள்ள பாப்பான்குளத்தில் குளம் தூர் வாரும் திருவிழா…

வரவனை கிரமத்திற்குட்பட்ட 21 குளங்களையும் தூர் வார முடிவெடுத்து எயிட் இந்தியா மற்றும் கைஃபா அமைப்பின் உதவியுடன் பசுமைக்குடி தூர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES