மதுரை,பிப்.07-
திமுக தேர்தல் அறிக்கை குழு 3வது நாளாக மதுரையில் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. மக்களவை தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து திமுக எம்.பி. தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள துவாரகா திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
மதுரை வடக்கு மதுரை மாநகர், உசிலம்பட்டி சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மாற்றுத்திறனாளிகள், மீனவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை கூறினர்.
இந்நிகழ்வின் போது முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ஆலோசனைப்படி, அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு கனிமொழி எம்.பி அவர்களிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்.
அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது :- உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து அரசு கெஜட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
தென்னை மர விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசு நேரடியாக தேங்காய் கொப்பரைகளை கொள்முதல் செய்து அதை தேங்காய் எண்ணெயாக மாற்றி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அரசே விற்பனை செய்ய வேண்டும்.
தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்படும் விதைகளை வாங்கி விவசாயம் செய்து பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்.
வானிலை ஆராய்ச்சி மையத்திற்கு ரேடார் கருவி 100 சென்டி மீட்டருக்கு வழங்க வேண்டும்.
விவசாயிகள் நஷ்டப்படும் போது அரசு மானியம் வழங்க வேண்டும்.
போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை கனிமொழி எம்.பி அவர்களிடம் வழங்கினார்.
மேலும் சென்னை மேயர் பிரியா அவர்களிடம் இதே கருத்தை வலியுறுத்தி பேசினார்.