Friday , February 7 2025
Breaking News
Home / செய்திகள் / இடிஐஐ,அசஞ்சர் பெட்கிராட் இணைந்து பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு மதுரை மேயர் இந்திராணி சான்றிதழை வழங்கினார்
MyHoster

இடிஐஐ,அசஞ்சர் பெட்கிராட் இணைந்து பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு மதுரை மேயர் இந்திராணி சான்றிதழை வழங்கினார்

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் பெட்கிராட் சுயதொழில் பயிற்சி நிறுவனம் இணைந்து பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராமன் தலைமையிலும், தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள்ரூபி ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது.

பொதுச்செயலாளர்
எஸ்.அங்குசாமி வரவேற்று பேசினார்.இ.டி.ஐ.ஐ முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் விழாவை துவக்கி வைத்து பேசினார்.

மதுரை மாநகராட்சி மேயர் திருமதி இந்திராணி பொன்வசந்த் அனைவருக்கும் சான்றிதழை வழங்கி பேசும்போது :-

பெண்கள் தொழில் முனைவோராக படித்து சான்றிதழ்கள் வாங்கியவுடன் உங்கள் பணி முடியவில்லை. துவக்க நிலையில் உள்ளது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்து தொழில் முனைவோராக மாறும் போது தான் தன்னிறைவு அடைய முடியும் . தைரியம், தன்னம்பிக்கை தொழில் ரகசியம் விற்பனை செய்யும் திறமை, வங்கி கடனை மானியத்துடன் பெற்று தொழிலில் பெருக்க பல்வேறு யுத்திகளை கையாள வேண்டும். பெண்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என பேசினார்.

காவல்துறை ஆய்வாளர் வசந்தா பயிற்சி பெற்ற அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் பெண்களுக்கான உரிமைகள், கடமைகள், சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்

பொருளாதார ரீதியாக உயர்ந்து வாழ பெண்களுக்கு சுயதொழில் கை கொடுக்கும். ஆண்களை விட பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். என்பதை நீங்களும் உறுதி செய்ய வேண்டும் என அவர் பேசினார்.

இந்நிகழ்வில் மதுரை மாநகராட்சி நகர் நல முதன்மை சுகாதார அலுவலர் டாக்டர்.விநோத் குமார், மாநகராட்சி சமுதாய அலுவலர் பஞ்சவர்ணம், ICICI வங்கி உதவி மேலாளர் சக்திவேல், தமிழ்நாடு கிராம வங்கி முதுநிலை மேலாளர் குணசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் கண்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குடும்பநல ஆலோசகர் கதிரவன், ஆதரவற்றோர்இல்ல நிர்வாகிகள் இந்திரா,சுசிலா, பயிற்சியாளர்கள் கீர்த்திராஜ், சிபா.மகேஸ்வரி, விஜயவள்ளி, திவ்யா, கார்த்தியாயினி, ஐஸ்வர்யா மற்றும் பயிற்சியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை மாவட்டம் மேலக்குயில்குடி சீரடி சாய்பாபா மலைக்கோயிலில் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமி தலைமையில் மாபெரும் அன்னதானம்…

மதுரை மாவட்டம் மேலக்குயில்குடி மலை மேல் அமைந்திருக்கும் சீரடி சாய்பாபா மலைக்கோயில் மற்றும் திருவண்ணாமலை கிரிவலப் பாதை, சிவகங்கை மாவட்டம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES