குளித்தலை சுங்க கேட்டில் முசிறி சாலையில் டாஸ்மாக் அருகில் தற்போது முசிறி பேருந்து நிறுத்தம் செயல்படுகிறது இங்கு ஆயிரக்கணக்கான பள்ளி மாணவிகள் கல்லூரி மாணவிகள் பொதுமக்களும் பேருந்து பயணம் செய்ய இந்த பேருந்து நிறுத்தத்தை பொதுமக்களும் பெண்களும் முசிறி செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது குடிமகன்களின் கூடாரமாகவும் குடிமகன்கள் வாகன நிறுத்தும் இடமாகவும் மாறிப் போயுள்ளது,. இவ்வாறு இருப்பதால் பள்ளி மாணவிகளுக்கும் பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எனவே மீனாட்சி ஸ்டில்ஸ் இரும்பு கடை அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்தி வருகிறார்கள் எனவே அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக அந்த இரும்பு கடையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த இடத்தில் பேருந்து நிறுத்தம் அமைத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என 3 – 2 -2020 நேற்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் .மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி . விடுதலை சிறுத்தைகள் கட்சி . தேசிய முற்ப்போக்கு திராவிடர் கழகம் மாணவரணி சக்திவேல் தமிழ்நாடு இளைஞர் கட்சி நகர செயலாளர் பிரபாகரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் குளித்தலை சார் ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. உடனடியாக இந்த அனைத்து கட்சி மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அனைத்து கட்சிகள். அனைத்து அமைப்புகள் . பொது மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்
Check Also
Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…
Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது …