6/2/2020 இன்று காலை முதல் குளித்தலை பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவனத்திற்காக நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது…
அதில் கூறியது திருச்சி கரூர் சாலையில் குளித்தலை பெரிய பாலம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளிலும் நிறுத்தி பயணிகளை புகார்களுக்கு இடமளிக்காமல் ஏற்றி இறக்கி செல்ல வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோவை கோட்டம் கும்பகோணம் கோட்டம் மற்றும் இதன் கீழ் இயங்கும் மண்டலங்கள் கிளைகள் கோவை ஊட்டி திருப்பூர் ஈரோடு கரூர் திருச்சி கும்பகோணம் புதுக்கோட்டை காரைக்குடி நாகப்பட்டினம் பெரம்பலூர் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய கிளையிலிருந்து குளித்தலை வழித்தடத்தில் வந்து செல்ல அனைத்து அரசு பேருந்துகள் ஓட்டுநர்கள் ஆகியோர்களுக்கு கிளை அறிவிப்பு பலகை வாயிலாக சுற்றறிக்கை கொடுத்து அறிவுறுத்தப்பட்டு உள்ளது எனவே அனைத்து அரசு பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் திருச்சி கரூர் சாலையில் உள்ள குளித்தலை பெரிய பாலம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இந்த கோரிக்கையை நிறைவேற்றித் தந்த மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் கோவை மற்றும் கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குனர்கள் மண்டல பொது மேலாளர் மேலாளர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் நோட்டீஸ் அனைத்து ஓட்டுனர் நடத்துனர் களுக்கு கொடுத்தனர்.. இந்த நிகழ்வில் குளித்தலை bhel தொழிலாளர் நல சங்கம் மற்றும் குளித்தலை நகரமக்கள் இயக்கம்மற்றும் குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக கடந்த பிரபாகரன் அவர்களும் கலந்து கொண்டனர்.