Thursday , July 3 2025
Breaking News
Home / வட மாவட்டங்கள் / சென்னை / ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம்- ரஜினிகாந்த்….

ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம்- ரஜினிகாந்த்….

சென்னையில் இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்ததில் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தியில்லை, ஏமாற்றமே என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை :

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் இன்று மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார். இதில் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த சந்திப்பின்போது அரசியல் கட்சி பெயர் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் சந்திப்பு கூட்டம் முடிந்து ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்றார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது:-
கட்சி தொடங்குவது பற்றி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன்.

மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்ததில் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தியில்லை ஏமாற்றமே. திருப்தியில்லாத, ஏமாற்றமடைந்த விஷயம் என்னவென்று பின்னர் கூறுகிறேன்.

சிஏஏ விவகாரத்தில் பிரதமர் மற்றும் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இஸ்லாமிய அமைப்பினரிடம் கூறினேன். பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்த என்னால் முடிந்தவரை உதவி செய்வதாகவும் கூறினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் வெற்றிடத்தை கமலுடன் சேர்ந்து  நிரப்புவீர்களா என்ற  நிருபர்களின் கேள்விக்கு ‘நேரம் தான் பதில் சொல்லும்’ என ரஜினி கூறினார்.
Bala Trust

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக அண்ணன் திரு கு. செல்வப்பெருந்தகை அவர்களின் ஒரு வருட பணி…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக அண்ணன் திரு கு. செல்வப்பெருந்தகை அவர்கள் பதவியேற்று ஒரு வருடம் முடிந்து இரண்டாவது ஆண்டில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES