05.04.2020 ஞாயிறு இன்று காலையில்
ஈரோடு மாநகர மக்கள் காய்கறி வாங்க மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.
ஈரோடு பெரிய சந்தை ஈரோடு பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு செயல்படுகிறது. மாநராட்சியும், காவல்துறையினரும் மற்றும் சமூக அக்கறை கொண்ட தன்னார்வலர்களும் அதிகாலை முதல் மக்களை வரிசைபடுத்துதல், மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பணியில் தொய்வின்றி செயல்பட்டனர். அதிகாலை 5மணியில் இருந்து வரிசையில் நின்று பொருட்களை வாங்க அலைமோதினர்.
வரிசையின் நீளம் மிக அதிகம், ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு அரசு மருத்துவமனை வரை நீண்டது மிக சிரமத்தை மக்களுக்கு ஏற்படுத்தியது.
அதிக அளவில் வீட்டில் இருக்கும் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் குழந்தைகள் இது போன்ற பொது இடங்களில் அனுப்ப வேண்டாம் என்று அரசு பலமுறை எச்சரித்தும், மக்களின் அலட்சியமான செயல்பாட்டை காண்பது வருத்தை அளிக்கிறது என்று மாநகரட்சி ஊழியர்கள் தெரிவித்தார்கள்.
சில வியாபரிகள் சந்தைக்கு வெளியே தங்களது வாகனங்களில் வியாபாரத்தை செய்தனர். அப்பகுதியில் மக்கள் எந்த விதமான வழிமுறையும் பின்பற்றாமல் ஒருவருடன் ஒருவர் காய்கறிகளை வாங்கினர். காவல்துறையும் தன்னார்வலர்களும் தலையிட்டு அவ்வியாபாரிகளை விரைந்து அப்புறப்படுத்தினர்.
ஈரோடு சாந்தையில் ஏற்படும் கூட்டத்தை சாமளிக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும். வியாபாரிகளும் மற்றும் மக்களும் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொதுநலன் கருதி அன்புடன் கேட்டுக் கொள்வதாக தமிழ்நாடு இளைஞர் கட்சியின் ஈரோடு மாவட்டத்தலைவர்.
கோபால் அவர்கள் கேட்டு கொண்டார்.