சென்னை வேளங்காடு மயானத்தில் இறந்த மருத்துவரின் உடலை புதைத்த மருத்துவர் பிரதீப் கூறியது என்னவென்றால்…
50-60 பேர் கல், கட்டை கொண்டு வந்து ஆம்புலன்ஸ் உடைத்து ஓட்டுநர்களின் மண்டை உடைத்து, சுகாதார ஆய்வாளர்களை தாக்கினர். செய்வதறியாமல் ஈகா தியேட்டர் வரை ஆம்புனலன்ஸ் எடுத்து வந்தோம்.
ரத்தம் சொட்ட சொட்ட நின்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களால் அங்கிருந்து நகர முடியவில்லை. அவர்களை அருகில் இருந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு நான் PPE அணிந்து கொண்டேன். உடன் 2 வார்டு பாய்ஸ் மட்டுமே இருந்தார்கள். அவரது மனைவி மற்றும் மகனை திருப்பி அனுப்பிவிட்டோம்.
மீண்டும் வேளங்காடு மயானத்துக்கு ஆம்புலன்ஸ் எடுத்து சென்றோம். டாக்டர் சைமனின் உடலை புதைத்தோம். உடன் குடும்ப உறுப்பினர்கள் யாரும் கிடையாது. புதைத்த பிறகு மண் மூட ஜே சி பி இயந்திரத்தை இயக்கக் கூட யாரும் கிடையாது. கையால் மண் அள்ளி போட்டோம்.
அங்கிருந்த காவலர் ஒருவர் உதவி செய்தார். மண்வெட்டி கொண்டு மண் அள்ளி போட்டோம்.
இறந்தவர் பல உயிர்களை காப்பாற்றிய மருத்துவர். அவரை மருத்துவராக பார்க்காவிட்டாலும் மனிதனாக மட்டுமாவது பார்த்திருக்கலாம் அல்லவா….
மனிதம் மரணித்து கொண்டிருக்கிறது…
எதற்கு இந்த சோதனை ஏன் இந்த வேதனை மருத்துவர்களுக்கு…
மனிதா உனக்கு மனம் வேண்டாமா உனக்கு ஒரு பிரச்சினை என்றால் உடல் ரீதியாக மருத்துவம் செய்ய கடவுள் போல மருத்துவரை பார்க்கிறாய்…
ஆனால் அதே மருத்துவர் உன்னைப்போல் மனிதனாக மாறும் போது ஏனோ உன் மனம் ஏற்க மறுக்கிறது…
மனிதனுக்குள் கொடிய மிருகம் சிலருக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது, அதையே தான் நேற்று சென்னையில் நம் கண்ணிற்கு தெரிய வைத்தது…
கொடிய வைரஸிலிருந்து கூட தப்பித்து விடலாம் ஆனால் இந்தக் கொடிய மிருகங்களுடன் வாழ்வதை நினைத்துப் பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருக்கிறது.
தன் கடமையைச் செய்த மருத்துவர் பிரதீப் அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு விழிப்புணர்வு இல்லாத அந்த மக்களுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.