திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் கிழக்கு தாலுகா சாணார்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட **_அஞ்சுகுழிப்பட்டி யில் சுமார் 60 குடும்பங்கள் மூங்கில் கூடை முடையும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் கூடை முடைவதற்கு தேவையான மூங்கில்கள் தேனியில் இருந்து திண்டுக்கல்லுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு திண்டுக்கல் லில் உள்ள மரக்கடைகளில் மூங்கில்களை விலைக்கு வாங்கி கூடை முடைந்து மொத்தமாக திண்டுக்கல், நத்தம், மதுரை, தேனி, போன்ற ஊர்களுக்கு கொண்டுபோய் மொத்த விலைக்கு விற்பனை செய்வது வழக்கம். ஒரு காய்கறி கூடையின் விலை அதிகபட்சமாக 50 ரூயாய்க்கும், ஒரு தக்காளி கூடையின் அதிகபட்ச விலை 60 ரூபாய்க்கும், திருமணத்திற்கு உணவு சமைப்பதற்கான கூடை ஒன்று அதிகபட்ச விலையாக 50 ரூபாய்க்கும், சிறுதானிய கூடை ஒன்றின் அதிகபட்ச விலையாக 30 ரூபாய்க்கும், மல்லிகை, முல்லை, கனகாம்பரம், போன்ற பூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பூ பறிக்க பயன்படுத்தும் கூடை ஒன்றின் அதிகபட்ச விலை 30 ரூபாய் என்ற அளவில் கூடை முடைபவர்களிடம் மொத்தமாக வாங்கிக்கொள்வார்கள். திருமண முகூர்த்த காலங்கள், காய்கறி அறுவடை காலங்கள், போன்ற காலங்களில் கூடைகள் அதிக அளவில் விற்பனையாகும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரங்கு உத்தரவு அமலில் உள்ள. நிலையில் இந்த மூங்கில் கூடை முடைபவர்கள் உற்பத்தி செய்து வைத்துள்ள மூங்கில் கூடைகள் ஆயிரக்கணக்கில் விற்பனைக்கு எடுத்துச் செல்ல இயலாமல் உள்ளதால் *அஞ்சுகுழிப்பட்டி*யை சேர்ந்த மூங்கில் கூடை முடையும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என மூங்கில் கூடை முடையும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Check Also
Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…
Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது …