Thursday , November 21 2024
Breaking News
Home / கரூர் / மின்சாரம், சிந்திப்போம். சிரமங்களைத் தவிர்ப்போம், சிறப்புடன் வாழ்வோம் – K. முகம்மது பஜ்லுல் ஹக், BA, BL
MyHoster

மின்சாரம், சிந்திப்போம். சிரமங்களைத் தவிர்ப்போம், சிறப்புடன் வாழ்வோம் – K. முகம்மது பஜ்லுல் ஹக், BA, BL

பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் கொரோனா தொற்று காரணமாக வீட்டிலேயே தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உண்ணுவது, உறங்குவது, பொழுது போக்குவது, கணினி மூலம் அலுவலக பணிகளை நிறைவேற்றுவது என அனைத்தும் நான்கு சுவருக்குள் நடத்தி முடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நிம்மதியோடு இவைகளை நிறைவேற்றி முடிப்பதற்கு மின்சாரம் மிக மிக அவசியம். மின்சாரம் இல்லாமல் எதுவும் இல்லை. மின்சாரம் சிறிது நேரம் தடைபட்டாலும் அதினால் ஏற்படும் சிரமம் அதிகம். எனவே மின்தடை இல்லாத நிலை வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால், அடிக்கடி ஏற்படும் மின் தடைக்கு நாமும் மறைமுக காரணமாக இருக்கிறோம் என்பதை மறந்துவிடுகிறோம். பிள்ளைகள் விளையாடட்டும் என்பதற்காக பட்டம் விட அனுமதிக்கிறோம். மூங்கில் கம்பு இல்லை என்பதற்காக உலோக கம்பிகளை வைத்து பிள்ளைகள் பட்டம் செய்வதை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறோம். விடுகின்ற பட்டம் அருகில் செல்லும் மின்சார வயரில் பட்டு அறுந்து, பட்டம் மட்டும் மின்சார வயரில் மாட்டிக்கொள்கிறது. பட்டத்தில் உள்ள உலோக கம்பி இரு மின்சார வயரில் படுவதால் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு வயர் அறுந்து விழுவதும் அதன் காரணமாக மின்தடை ஏற்படுவதும் அடிக்கடி நடக்கிறது. மேலும் ஏ.சி.வைத்திருப்போர் குளிரூட்டும் அளவை 20 டிகிரி அளவுக்கு வைப்பதால் மின் தேவை அதிகமாகிறது. ஒரு தெருவுக்குள் பல வீடுகளில் இவ்விதம் ஏ.சி.யை
பயன்படுத்துவதால் மின்சார வயரில் மின்னோட்டம் அதிகரித்து வயர் அறுந்து விழவும் வாய்ப்பு ஏற்படுவதோடு. அந்தத் தெருவின் கடைசியில் உள்ள வீடுகளில் அதிக மின் பளு காரணமாக வோல்டேஜ் குறைபாடு ஏற்பட முடியும். இதன் காரணமாக ஏசி மற்றும் மின்சாதனங்கள் பழுதாகும் நிலை உருவாகிறது. டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி ப்யூஸ் போகும். மின்சாரம் தடைபட்டு மீண்டும் மின்சாரம் வரும்போது ஏசி மிஷின்கள் அதிக மின்சாரத்தை எடுப்பதால் மறுபடியும் மின்தடை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே ஏ சி பயன்படுத்துவோர் குளிர் அளவு 25 டிகிரி என வைத்தால் மேற்கண்ட சிரமங்களை தவிர்க்கலாம். அதிக குளிர்ச்சி
கொரோனா வைரஸூக்கு பிடித்த ஒன்று என்பதையும் மறந்துவிட வேண்டாம். ஒரே ஏ.சி.அறையில் குடும்பத்தினர் அனைவரும் தங்குவதால் ஏ.சி.இன் செயல்பாடு தனிமனித வெப்பம் காரணமாக அதிகரித்து ,மின் செலவும் அதிகரிப்பதால் மின்கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. மேலும் ஒரே அறையில் குடும்பத்தினர் மொத்தமாக தங்குவதால் சமூக இடைவெளியை பராமரிப்பதில் இருந்து நாம் தவறுகிறோம். எனவே பொதுமக்கள் மின் தடைக்கு மின்சார வாரியம் மட்டுமே பொறுப்பு அல்ல என்பதையும் நாமும் ஒரு காரணம் என்பதை உணர்ந்து ஏ.சி. பயன்பாடு, பட்டம் விடுதல், ஒரே அறையில் தங்குவது போன்ற விஷயங்களில் சமூக அக்கறையோடு நடந்துகொள்வது நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை தருவதாக இருக்கும். தடையில்லா மின்சாரம் கிடைக்கப்பெற மின்வாரியத்திற்கு நம்மால் ஆன ஒத்துழைப்பை வழங்கிடுவோம். நம்மால் ஏற்படும் மின்தடை காரணமாக நள்ளிரவு நேரத்திலும் மின் தடையை நீக்க ஓடிவரும் மின்சார ஊழியனின் சிரமங்களை சற்று எண்ணிப் பார்ப்போம். சிந்திப்போம். சிரமங்களைத் தவிர்ப்போம். சிறப்புடன் வாழ்வோம்.

K. முகம்மது பஜ்லுல் ஹக், BA, BL,
அட்வகேட், நோட்டரி
அரவக்குறிச்சி.

Bala Trust

About Admin

Check Also

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES