Thursday , December 18 2025
Breaking News
Home / Politics / அறிக்கை
NKBB Technologies

அறிக்கை

முன்னாள் இந்திய பிரதமர் பாரத ரத்னா இந்திரா காந்தி அவர்களுக்கு வடசென்னை யானை கவுனி பகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் மறைந்த திரு ஜி.கே. மூப்பனார் அவர்கள் திறந்துவைத்த சிலை இருப்பதை அனைவரும் அறிவார்கள். அன்னை இந்திரா காந்தி இறந்த பிறகு திறக்கப்பட்ட முதல் சிலை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த பகுதியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டிருக்கிறது. அந்த மேம்பாலத்திற்கு அன்னை இந்திரா காந்தி அவர்களின் பெயரை சூட்டவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

ஏற்கனவே சென்னை மாநகரில் அன்னை இந்திரா காந்திக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட தாங்கள் இந்த மேம்பாலத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என அன்போடு வேண்டுகிறேன்.May be a doodle of map and text

Bala Trust

About Admin

Check Also

பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES