உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் என்றால் அது இந்தியாவும் சீனாவும் தான்.
உலக மக்கள் தொகை 100 கோடியை எட்ட குறைந்தபட்சம் சில ஆயிரம் நூற்றாண்டுகள் ஆகும் என்றே 19ம் நூற்றாண்டில் முதலில் பலரும் கருதினர். ஆனால், வெறும் 200 ஆண்டுகளுக்குள், மக்கள் தொகை அதைவிட ஏழு மடங்கு அதிகரித்து உள்ளது.
உலக மக்கள்தொகை: கடந்த 2011ஆம் ஆண்டில், உலக மக்கள்தொகை 700 கோடியை எட்டியது. வரும் 2030ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை சுமார் 850 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 2050 ஆம் ஆண்டில் இது 970 கோடியையும் 2100இல் 1000 கோடியையும் இது தொடும் என்றே ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கணித்துள்ளன.