நேபாளம்: நேபாளத்தில் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளை சூழ்ந்துள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், காத்மாண்டு நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முகிலிங்-நாராயண்காட் நெடுஞ்சாலையில் சிட்வான் மாவட்டத்தில் இரண்டு பேருந்துகள் சென்று கொண்டிருந்தன.
ஒரு பேருந்து 24 பயணிகளுடன் பிர்கஞ்சில் இருந்து காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தது, மற்றொன்று 41 பயணிகளுடன் காத்மாண்டுவில் இருந்து ரவுதஹாட் மாவட்டத்தில் உள்ள கவுருக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த இரு பேருந்துகளும் நேபாளத்தின் மடன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பயணித்து கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 63 பேருடன் சென்ற இரண்டு பேருந்துகள் திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். திரிசுலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகளில் சென்ற மற்றவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.